டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது கிரிக்கெட் வடிவத்திலேயே மிகவும் கடினமான ஒன்று, மிகத் தீவிரமான ஒன்று. ஆனால்,  பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது கராச்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி பெரும் சிரிப்பலையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் வர்ணனையாளர் ஒருவரின் இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அனைவரும் அவரை பகடிக்கு உள்ளாக்கி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போட்டியின் போது, முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக மாட் ஹென்றி - அஜாஸ் படேல் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, சக வர்ணனையாளரான டேனி மாரிசனை அழைப்பதற்கு தவறுதலா 'டேனி டேனியல்ஸ்' என அழைத்துவிட்டார். இந்த வீடியோதான் இணையத்தில் மிகவும் வைரலாகி வந்தது. 


மேலும் படிக்க | IND vs SL : சோதனை மேல் சோதனை... காயத்தால் மீண்டும் வாய்ப்பை இழக்கும் அதிரடி வீரர்!


வைரலானது எந்த அளவிற்கு வீச்சினை பெற்றிருந்தது என்றால், டேனி டேனியல்ஸின் கண்ணில் படும்வரை அனைவரும் ஷேர் செய்திருக்கின்றனர். அந்த வீடியோ கண்ட டேனியல்ஸ் பங்கமாக கலாய்த்து,"Put me in  Coach" என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டும் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, தன்னையே கோச்சாக போடுங்கள் (!) என கலாய்க்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ளார்.



டேனி டேனியல்ஸ் என்பவர் உலகப்புகழ் பெற்ற, பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்த ஆபாசபட நடிகை ஆவார். எனவே, நியூசிலாந்தின் மூத்த பந்துவீச்சாளரும், தற்போது வர்ணனையாளருமாக உள்ள டேனி மாரிசனையும், டேனி டேனியல்ஸையும் அந்த பாகிஸ்தான் வர்ணனையாளர் குழப்பியுள்ளார். 


நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 449 ரன்களையும், பாகிஸ்தான் 408 ரன்களையும் எடுத்தது. தொடர்ந்து, பெரும் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்து வருகிறது. 


மேலும் படிக்க | Ind vs SL: 155கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்! என்ன ஆனது என்று பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ