ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கோட் மைதானத்தில் நடைப்பெற்றது.


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் திணறியது. இந்நிலையில் ஆட்டத்தின் 49.1-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது.


அணியில் அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 74 ரன்களை எடுத்தார். இவருக்கு துணையா கே.எல் ராகுல் 47(61) ரன்கள் குவித்தார். அணித்தலைவர் விராட் கோலி 16(14) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.


ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்ச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாட் கம்மீஸ் மற்றும் கேன் ரிச்சர்ட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்ணர் 128(112) மற்றும் அரோன் பின்ச் 110(114) ரன்கள் என இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். ஆட்ட நாயகன் விருதினை டேவிட் வார்ணர் தட்டி சென்றார்.


இப்போட்டியின் வெற்றி மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.


இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கட் மைதானத்தில் ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.