David Warner Net Worth In Tamil: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான டேவிட் வார்னர் அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஏற்கெனவே, தனது ஓய்வை அறிவித்திருந்த அவருக்கு சிட்னி மக்கள் தங்களின் அன்பைச் செலுத்தி அவருக்கு என்றென்றும் நினைவில் நிற்கும் பிரியாவிடையை கொடுத்தனுப்பினர். டேவிட் வார்னர் டெஸ்ட் அரங்கில் மட்டுமின்றி ஒருநாள் அரங்கில் இருந்தும் ஓய்வு பெற்றார். 2009ஆம் ஆண்டு சர்வதேச அளவில் இவர் அறிமுகமானார்.    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'இப்படிதான் நினைவுக்கூரப்பட வேண்டும்...'


சர்வதேச அளவில் அவர் இனி டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். மேலும், ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் (ICC T20 World Cup 2024) அதில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என கூறப்படுகிறது. 37 வயதான அவர் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்பதில் ஐயமில்லை. 


டேவிட் வார்னர் (David Warner) தனது பிரியாவிடையின்போது ," பரபரப்பானவர், பொழுதுபோக்கு தன்மை நிறைந்தவர் என்று நினைவுக்கூர விரும்புகிறேன். மேலும் நான் விளையாடிய விதம் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் என்றும் நம்புகிறேன். இளைஞர்கள் என் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். வெள்ளை பந்து கிரிக்கெட் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரை, இது நம் விளையாட்டின் உச்சம். எனவே ரெட்-பால் (டெஸ்ட் கிரிக்கெட்) விளையாட கடினமாக உழைக்க வேண்டும், ஏனெனில் அது பொழுதுபோக்கான ஒன்றும் கூட..." என்று பேசியிருக்கிறார்.



மேலும் படிக்க | IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு?


பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வென்று வைட்வாஷ் செய்தது. கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜன.3ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியா இந்த போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இன்று வென்றது. மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 34 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களையும் அடித்து டேவிட் வார்னர் மிரட்டலாக தனது கடைசி போட்டியை நிறைவு செய்தார். தொடர் நாயகனாக பாட் கம்மின்ஸ் மற்றும் ஆட்ட நாயகனாக பாகிஸ்தானின் அமீர் ஜமால் ஆகியோர் தேர்வாகினர். 


கிரிக்கெட் உலகமே டேவிட் வார்னரின் (David Warner Retirement) இதுவரையிலான கிரிக்கெட் வாழ்வை நினைவுக்கூர்ந்து வருகிறது. அந்த வகையில், அவர் இன்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற சூழலில், அவரின் சொத்து மதிப்பை பார்ப்பது முக்கியமாகிறது. அவரது வருமானத்தின் பெரும்பகுதி கிரிக்கெட் வீரராக அவருக்கு இருக்கும் ஒப்பந்தம்தான். 2024ஆம் ஆண்டில் அவரது நிகர மதிப்பு 13 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் (Cricket Australia) வாரியத்துடனான ஒப்பந்தத்தின்படி, டேவிட் வார்னர் ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பளமாக பெறுகிறார். அவரின் மாத வருமானம் சுமார் 90 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். வார்னரை கடந்த 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6.25 கோடி ரூபாய் கொடுத்து அணியில் எடுத்தது. 


டேவிட் வார்னரின் சொத்துக்கள்


விளம்பரம் மூலமும் அவர் பெரும் வருமானத்தை பெற்றுள்ளார்.  LG, KFC, டொயோட்டா,  Asics மற்றும் DSC போன்ற பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். வார்னர் சிட்னியில் உள்ள மாரூப்ராவில் பல சொத்துக்களை வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. 


அந்தப் பகுதியில் 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு சொகுசு பங்களாவை அவர் வாங்கியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அவரும் அவரது மனைவி கேண்டீஸ் உடன் இணைந்த அந்த வீட்டை வாங்கினாலும், அது சீரமைக்கப்பட்டு வந்ததால் அங்கு அவர்கள் குடும்பத்தினருடன் குடியேறவில்லை. அவர்கள் தற்போது 2023ஆம் ஆண்டு மே மாதம்தான் அந்த வீட்டில் குடியேறினர். Lamborghini Huracan and Audi போன்ற பல சொகுசு கார்களை அவர் வைத்துள்ளார், இதனை அவரின் சமூக வலைதளப் பக்கங்களில் பார்க்க முடியும்.


மேலும் படிக்க | T20 World Cup 2024 Schedule: டி20 உலகக் கோப்பையில் ஒரே குரூப்பில் இந்தியா - பாகிஸ்தான்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ