T20 World Cup 2024 Schedule: டி20 உலகக் கோப்பையில் ஒரே குரூப்பில் இந்தியா - பாகிஸ்தான்..!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பிடித்துள்ளன.

 

1 /8

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பிடித்துள்ளன.  

2 /8

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெறுகிறது. 2010 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் 14 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது.  

3 /8

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றனர். நான்கு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது குரூப்களில் உள்ள அணிகளுக்கு எதிராக மோதிக்கொள்ளும். இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் சுற்றுக்கு தகுதி பெறும்.  

4 /8

சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு அணிகளுக்கு இடையே மோதல் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.  

5 /8

இதையடுத்து டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடைபெறும் எனவும், ஜூன் 1 முதல் 18 வரை குரூப் பிரிவு போட்டிகளும், ஜூன் 19 முதல் 24 வரை சூப்பர் 8 சுற்று போட்டிகளும் நடைபெறவுள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 தேதிகளிலும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.  

6 /8

குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், குரூபி சி - நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், குரூப் டி - தென் ஆப்பரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால் அணிகளும் இடம்பிடித்துள்ளன.   

7 /8

இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை ஜூன் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டி உலகமே எதிர்பார்க்கும் போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஜூன் 9ஆம் தேதி நடைபெறகிறது.  

8 /8

அமெரிக்காவுக்கு எதிராக ஜூன் 12ஆம் தேதியும், கனடாவுக்கு எதிராக ஜூன் 15ஆம் தேதியும் விளையாடுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகளில், கனடாவுக்கு எதிரான போட்டி ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. இதர போட்டிகள் அனைத்தும் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.