COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

11:27 PM - 28 Dec 2018


ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த நிலையில், நான்காம் நாள் அட்ட இறுதியில் 258 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி...   




10:22 PM - 28 Dec 2018


இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 218 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்....




இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்....வெற்றி பெற 239 ரன் தேவைப்படும் நிலையில் ஆஸ்திரெலியா வசம்  4 விக்கெட்டுகள் உள்ளன...


மெல்போர்னில் நடந்து வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனையடுத்து  399 இலக்குடன் ஆஸி 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 
 
தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி அணி, 151 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தடுமாறிய இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது. 


இதனைத்தொடர்ந்து 2வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


மேலும் நிதானமாக விளையாடி வந்த கவாஜாவும் விக்கெட்டை இழந்தார். இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம். வெற்றி பெற 239 ரன் தேவைப்படும் நிலையில் ஆஸ்திரெலியா வசம் 4 விக்கெட்டுகள் உள்ளது.