ஹோட்டலில் பாட்டில் மற்றும் ரிமோட்டை உடைத்த பாண்டிங் - அதிர்ச்சி தகவல்
கொரோனா காரணமாக ஹோட்டலில் தனிமைப்படுதப்பட்டபோது மூன்று நான்கு ரிமோட்களை உடைத்ததாக டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் லீக் நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் டெல்லி அணியில் சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையால் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதையடுத்து, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.
மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் சொதப்பும் இளம் வீரர் - இந்திய அணிக்கு திரும்புவது கடினம்
தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியுடன் இணைந்திருக்கும் அவர், அந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸிடம் கடைசி ஓவரில் த்ரில்லரை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஓரிடத்தில் தன்னால் இருக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். அணியினருக்கு தேவையான அறிவுரைகளை வழங்க முடியாமல் இருந்த அந்த நேரம் ஒரு விரக்தியான அனுபவம் எனத் தெரிவித்துள்ளார். ஹோட்டல் அறையில் அன்று மட்டும் 2 தொலைக்காட்சி ரிமோட்களை உடைத்ததாக கூறியுள்ளார்.
"கொரோனா தனிமைப்படுத்துதலில் இருந்து திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லி அணியை பிரிந்து இருந்த நாட்களில் விரக்தியான மனநிலையுடன் இருந்தேன். ஹோட்டல் அறையில் சுமார் 3- 4 ரிமோட்களை உடைத்துவிட்டேன். நீங்கள் ஒரு பயிற்சியாளராக இருக்கும்போது, அணியினருக்கு இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என குறுஞ்செய்திகளை அனுப்புவது என்பது வெறுப்பாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை மிகச் சிறப்பாக தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய அந்த அணி, அடுத்த சில போட்டிகளில் நன்றாக விளையாடி மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பியது. இதேபோல் கடந்த ஆண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினாலும், பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தகுதி பெறமுடியவில்லை. "36 அல்லது 37 ஓவர்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம். மூன்று அல்லது நான்கு ஓவர்களில் தான் வெற்றியை தவற விடுகிறோம். அந்த தவறுகளை இனி செய்ய மாட்டோம். மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்" என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | RCB vs RR: ஹர்ஷல் படேல் - ரியான் பராக் இடையே மோதல் - நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR