ஐபிஎல் தொடரில் சொதப்பும் இளம் வீரர் - இந்திய அணிக்கு திரும்புவது கடினம்

ஐபிஎல் தொடரில் இந்த வீரர் சொதப்புவதால், இந்த வீரர் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2022, 01:14 PM IST
  • சஞ்சு சாம்சனின் இந்திய அணிக்கான வாய்ப்பு
  • ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை
  • இயான் பிஷபின் கணிப்பு இதுதான்
ஐபிஎல் தொடரில் சொதப்பும் இளம் வீரர் - இந்திய அணிக்கு திரும்புவது கடினம் title=

ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 8 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்போதும், அவருடைய ஆட்டம் சிறப்பாக இல்லை. 

சஞ்சு சாம்சன் மீது விமர்சனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் இதுவரை குறிப்பிடத்தகுந்த அளவில் விளையாடவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டும் 46 ரன்களை விளாசினார். அவருடைய ஆட்டம் குறித்து பேசிய இயான் பிஷப், சஞ்சு சாம்சன் வாய்ப்புகளை வீண்டிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடும் முனைப்புடன் விளையாடுவதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாம்சன் கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 

மேலும் படிக்க | அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த ப்ரீத்தி ஜிந்தா - வைரலாகும் வீடியோ

சஞ்சு சாம்சன் ஃபார்ம்

சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவுக்கு இதுவரை விளையாடவில்லை. கடைசியாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில்கூட அவர் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் குறைவான ரன்களையே எடுத்தார். அதாவது, 27 ரன்களில் வனிந்து ஹஸரங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சித்தபோது, அவுட்டானார். 

டேனியல் வெட்டோரி புகழாரம்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, சஞ்சு சாம்சன் அனைத்து விதமான கிரிக்கெட் ஷாட்டுகளையும் விளையாட முயற்சிக்கிறார் எனக் கூறினார். அவருக்கு அனைத்து ஷாட்டுகளையும் விளையாடுவது எளிதாக இருப்பதாக கூறியுள்ள வெட்டோரி, அவர் ஆட முயற்சிப்பது போலவே, எளிதாகவும் அவுட்டாகி வெளியேறுகிறார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | RCB vs RR: ஹர்ஷல் படேல் - ரியான் பராக் இடையே மோதல் - நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News