RCB vs RR: ஹர்ஷல் படேல் - ரியான் பராக் இடையே மோதல் - நடந்தது என்ன?

ஹர்ஷல் படேல் மற்றும் ரியான் பராக் இடையே நடைபெற்ற மோதல் வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2022, 11:46 AM IST
  • ராஜஸ்தான் - பெங்களூரு மேட்சில் மோதல்
  • ஹர்ஷல் படேலுடன் ரியான் பராக் வாக்குவாதம்
  • மேட்ச் முடிந்தபிறகு கைக்குலுக்காமல் சென்றனர்
RCB vs RR: ஹர்ஷல் படேல் - ரியான் பராக் இடையே மோதல் - நடந்தது என்ன? title=

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் குறைவான ஸ்கோரை ராஜஸ்தான் அணி அடித்திருந்தாலும், சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணியை தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்தது. 

மேலும் படிக்க | அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த ப்ரீத்தி ஜிந்தா - வைரலாகும் வீடியோ

எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங்கில் சொதப்பியது. 19.3 ஓவர்கள் மட்டும் விளையாடிய அந்த அணி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடரில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களுரு அணி, மீண்டும் வழக்கம்போல் பிற்பகுதியில் தோல்விப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை விளாசினார். ஹர்ஷல் படேலின் கடைசி ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசி, ராஜஸ்தான் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார் ரியான் பராக். 

அந்த ஓவர் முடிந்ததும் ஹர்ஷல் படேல் மற்றும் ரியான் பராக் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் கடுமையாக பேசிக் கொண்டபோது, ராஜஸ்தான் அணியின் சப்போர்ட் ஸ்டாப் மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  இந்த சண்டை அத்துடன் முடியவில்லை. போட்டி முடிந்தபிறகும் இது தொடர்ந்தது. 

ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற பிறகு பெங்களுரு மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டனர். அப்போது ரியான் பராக் ஹர்ஷல் படேலுடன் கைக்குலுக்க தன் கையை நீட்டினார். ஆனால், அவரை மதிக்காததது போல் கடந்து சென்றார் ஹர்ஷல் படேல். இதற்கு முன்பு நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஹர்ஷல் படேலுடன் கைக்குலுக்காமல் சென்ற வீடியோ வைரலானது. 

மேலும் படிக்க | ரன் அவுட்டால் மாறிய மேட்ச்! மீண்டும் பேட்டிங்கில் சொதப்பிய ஆர்சிபி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News