ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்த அணிக்குள் கோவிட் பூகம்பம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு கடும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டு வருகிறது. அணி உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் பயோ பபிள் தொடர்பாக கடும் எச்சரிக்கையும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தொடர் வெற்றிக்குப் பிறகு வருந்தும் தோனி - மனக்குமுறலுக்கு காரணம் இதுதான்



இருப்பினும் டெல்லி அணிக்குள் கொரோனா பரவல் தொடங்கியது. அந்த அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டனர். ரிக்கிப் பாண்டிங் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றாலும், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாக அவரும் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால், சில போட்டிகளில் கூட அவர் பங்கேற்கவில்லை. தற்போது, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும், நட்சத்திர வீரருமான பிரித்திவி ஷா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



லேசான காய்ச்சல் என்றாலும், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அவர், மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் உடல் நலம் பெறுவார் என டெல்லி அணி வட்டாரம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இல்லை எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மிட்ஷெல் மார்ஷ் உள்ளிட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரு சில போட்டிகளை தவறவிட்டனர். இப்போது பிரித்திவி ஷா காய்ச்சல் காரணமாக சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. அடுத்த சில போட்டிகளிலும் அவர் விளையாடுவது சந்தேகம்.


இது டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டிய ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் சூழலில், முக்கியமான வீரர் அணியில் இருந்து விலகியிருப்பது டெல்லி ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | சச்சினால் பறிபோன கேப்டன் வாய்ப்பு - யுவராஜ் சிங் ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR