தோனி என்றாலே எப்போதும் பொறுமையான, குறிப்பாக கூலான ஆளுமையாகவே அவர்களின் ரசிகர்கள் அவரை பார்க்கின்றனர். மேலும், அவரின் பார்ட்டி, இரவு நேர பயணங்கள் குறித்தெல்லாம் பெரிதாக செய்திகள் ஏதும் வெளிவராது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் தொடரின் தொடக்க காலகட்டங்களில், இரவு நேர பார்ட்டிகள் விமர்சையாக நடைபெறும்போது கூட தோனி அதில் பங்கேற்றதில்லை. ஆனால், தற்போது சூழலே வேறு. அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் தோனி பங்கேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | புதிய கார் வாங்கிய தோனி! இரண்டு வீரர்களுடன் இரவு நேரத்தில் பயணம்!


அந்த பார்ட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, மனைவி சாக்ஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளது அந்த வீடியோவில் தெரிந்தது. மேலும், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் தோனியும் பாட்டு பாடுவது, அவரும் இணைந்து நடனமாடுவதும் அந்த வைரல் வீடியோவில், பதிவாகியுள்ளது. 



பாட்ஷாவுடன் தோனி நடனமாடியது மட்டுமின்றி, தோனியே டிஜே ஆகவும் மாறி பாட்டியில் உற்சாக கொண்டாடினார். இதை அவரது மனைவி சாக்ஷி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருந்த வீடியோ மூலம் தெரிய முடிகிறது. 


தற்போது, மகேந்திர சிங் தோனிக்கு அதிக ஓய்வு நேரம் கிடைப்பதால், தொடங்கியுள்ள பல தொழில்களில் அவர் தற்போது கவனம் செலுத்திவருகிறார். நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றிய கையுடன் ஹர்திக் பாண்டியா, தோனி உடன் துபாயில் இணைந்துள்ளார். ஹர்திக் பாண்டியா மட்டுமில்லாமல், அவரின் சகோதரர் குர்னால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோரும் நேற்றிரவு பார்ட்டியில் தென்பட்டனர். 



தோனிக்கு பழைய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, தோனி, பாடகர்கள் கிஷோர் குமார், முகேஷின் ஆகியோரின் பாடல்களுக்கு அடிமை என்றே கூறலாம். அவரிடன் ட்விட்டர் பயோவில் கூட, 'Hindi Retro Aficionado'(இந்தி பழைய பாடல்களின் பிரியர்) என்றே குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், நேற்றைய போட்டியில் பாட்ஷாவின் ராப் பாடல்களுக்கு அவர் நடனமாடினார். பாடகர் பாட்ஷா தோனியின் பெரிய ரசிகர் ஆவார். 


வரும் 2023 ஐபிஎல் தொடருக்கு பின் தோனி, அத்தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. எனவே, அவரது தலைமையில் 5ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனாகி, அவரை சிறப்பான முறையில் வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கின்றனர்.  


மேலும் படிக்க | டிராவிட்டுக்கு கல்தா... தோனிக்கு அழைப்பு: பிசிசிஐ பலே பிளான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ