டிராவிட்டுக்கு கல்தா... தோனிக்கு அழைப்பு: பிசிசிஐ பலே பிளான்!

20 ஓவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து டிராவிட் நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 19, 2022, 06:44 PM IST
  • பிசிசிஐ எடுத்திருக்கும் அதிரடி முடிவு
  • 20 ஓவர் அணியில் பெரிய மாற்றம்
  • இந்திய அணிக்கு மீண்டும் வரும் தோனி
டிராவிட்டுக்கு கல்தா... தோனிக்கு அழைப்பு: பிசிசிஐ பலே பிளான்! title=

பிசிசிஐ அதிரடி முடிவு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. கேப்டன் ரோகித் சர்மா தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டும் அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது. மற்றபடி அவருடைய ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால் 20 ஓவர் இந்திய அணியில் அனைத்து சீனியர் பிளேயர்களுக்கும் கல்தா கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 

ரோகித் நீக்கம்

மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக செயல்படுமாறு பிசிசிஐ அறிவுறுத்த உள்ளது. 20 ஓவர் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் படையை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய தேர்வுக்குழுவையும் பிசிசிஐ தேர்வு செய்ய இருக்கிறது.

மேலும் படிக்க | உதவிக்கு அழைத்தாரா பாண்டியா... நியூசிலாந்து பறந்த குஜராத் பயிற்சியாளர் - ஏன் தெரியுமா?

டிராவிட் பொறுப்பு குறைப்பு

மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் பொறுப்புகளை குறைக்க பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட தொடர்களில் தோல்வியை மட்டுமே சந்தித்திருக்கிறது. இதனால், 20 ஓவர் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க திட்டமிட்டிருக்கும் பிசிசிஐ, அதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அழைக்க முடிவு செய்திருக்கிறது. 

தோனிக்கு அழைப்பு 

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த 20 ஓவர் உலக கோப்பை வர இருப்பதால் அதற்காக புதிய இந்திய அணியை கட்டமைக்க வேண்டும் என எண்ணுகிறது பிசிசிஐ. அதனால், ஏற்கனவே இந்தியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, 20 ஓவர் இந்திய அணியை கட்டமைக்கும் பொறுப்பை கொடுக்கலாம் என ஆலோசித்து வருகிறது. ஐபிஎல் தொடர் முடிந்தபிறகு இதற்கான அறிவுப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ’பவர்பிளே கிங்’ புவனேஷ்வர் குமாருக்காக காத்திருக்கும் மற்றொரு ரெக்கார்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News