ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி அகமதாப்பாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்குப் பிறகு அதாவது 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் தோனி களமிறங்க இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கான ஆவல் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Virat Kohli: 'நான் எப்போதும் தோனியின் வலது கை தான்' - விராட் கோலி பெருமிதம்


இந்த சீசனில் மொத்தம் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன. மே 14 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டி, சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டியாகும். இது தோனியும் இந்த மைதானத்தில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அவருடைய வயது 40-ஐ கடந்துவிட்டது.



இதற்கு மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் அவர் நீடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டே தன்னுடைய கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்தார். ஆனால், ரிசல்ட் படுமோசமாக இருந்ததால் மீண்டும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இப்போது கேபட்ன் பொறுப்பில் நீடிக்கும் தோனி, இம்முறை மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருக்கிறது. 


இது குறித்து பேட்டி ஒன்றில் கூட தோனி தெரிவித்திருக்கிறார். சேப்பாக்கத்தில் விளையாடிய பிறகே ஐபிஎல் போட்டியில் ஓய்வு பெறுவேன் என தெரிவித்திருந்தார். அது இந்த ஆண்டு நடக்குமா? என்ற  எதிர்பார்ப்பும் இருக்கிறது. தோனியின் கடைசி ஐபிஎல் லீக் போட்டி என்றால் மே 20 ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக டெல்லியில் விளையாடும் போட்டி இருக்கும்.


மேலும் படிக்க | Virat Kohli: தோனி போன் செய்தால் ஒருபோதும் எடுக்கமாட்டார்: விராட் கோலி பகிர்ந்த சுவாரஸ்யம்


மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ