Virat Kohli: 'நான் எப்போதும் தோனியின் வலது கை தான்' - விராட் கோலி பெருமிதம்

Virat Kohli About MS Dhoni: தான் எப்போதும் தோனியின் வலது கையாகதான் இருந்தேன் என ஆர்சிபி பாட்காஸ்ட் ஒன்றில் நட்சத்திர வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2023, 01:50 PM IST
  • ஒருமுறை கூட சங்கடத்திற்குரிய தருணம் இருந்ததில்லை - விராட் கோலி
  • என்னை அவர் வாரிசாகவே வளர்த்தார் - விராட் கோலி
  • எங்களுக்கு இடையே சுமுகமான உறவு இருந்தது - விராட் கோலி
Virat Kohli: 'நான் எப்போதும் தோனியின் வலது கை தான்' - விராட் கோலி பெருமிதம் title=

Virat Kohli About MS Dhoni: ஒரு விளையாட்டு அணியில் ஒரே சமயத்தில், புகழ்பெற்ற இரண்டு வீரர்கள் விளையாடினால், எப்போதும் அவர்களுக்கு இடையே ஈகோ நிச்சயம் ஆட்டம்போடும் என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. அன்றும், இன்றும், என்றும் இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதில், கிரிக்கெட்டும், குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியும் விதிவிலக்கு அல்ல. 

ஆனால், இந்திய அணியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனிக்கும், அணியின் தூணாக கருதப்பட்ட விராட் கோலிக்கும் இடையே எப்போதும் வெளிப்படைத்தன்மையும், முரண்பாடுகள் அற்ற உறவும் நீடித்து வந்தது உலகமே அறியும். தோனி கேப்டன் பொறுப்பை, கோலிக்கு கொடுத்துவிட்டு அதே அணியில் ஒரு ராஜாவாக வலம் வந்தது யாராலும் கனவிலும் யோசிக்க முடியாது.

இதுவரை இந்திய அணியில் அப்படி யாரும் இருந்ததில்லை என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் பெரும்பாலானோரின் கருத்து. தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து இறங்கியதற்கு பின், அவரை சுற்றிவந்த சர்ச்சைகளில், விராட் கோலிக்கு தூணாக இருந்தது தோனிதான் என்று கோலியே ஒருமுறை கூறியிருந்தார். 

அவரின் வலது கையாக இருந்தேன்

அந்த வகையில், ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தரப்பில் நடத்தப்பட்ட 'RCB Podcast Season 2'-வில் விராட் கோலி, தோனிக்கும் அவருக்கும் இடையேயான உறவு குறித்து மீண்டும் ஒருமுறை நினைவுக்கூர்ந்துள்ளார். 

மேலும் படிக்க | INDvsAUS: பாட் கம்மின்ஸ் விலகல்; பிசிசிஐ போட்ட டிவீட் - பின்னணி காரணம் இதுதான்

தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தான் கேப்டன் பொறுப்பை ஏற்றபோது, தனக்கும், தோனிக்கும் இடையே ஒருமுறை கூட சங்கடத்திற்குரிய தருணம் இருந்ததில்லை என விராட் கோலி அந்த பாட்காஸ்டில் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி கூறியதாவது,"எனக்கும் தோனிக்கும் அந்த முழு காலகட்டத்திலும் எந்த தர்மசங்கடமான நிகழ்வுபம் நடந்ததில்லை. தோனிதான் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதுதான் உண்மை.

அவர் என்னை தனது சிறகுகளின்கீழ் எப்போதும் அழைத்துச் சென்றார். 2012ஆம் ஆண்டு முதல் அவரிடமிருந்து கேப்டன் பதவியை, ஏற்கப் போகும் ஒருவராகவே அவர் என்னை வளர்த்தார். நான் அவருக்கு துணை கேப்டனாக இருந்தேன். கிரிக்கெட்டில் நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நான் எப்போதும் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். நான் எப்போதும் அவருக்கு வலது கையாக இருந்தேன். நான் எப்போதும் விளையாட்டைப் புரிந்துகொண்டு விளையாடினேன். மேலும் நான் அணிக்காக நிறைய மேட்ச் வின்னிங் ஆட்டங்களை விளையாடியதால் எனக்கு நம்பிக்கையும் கிடைத்தது.

விளையாட்டு உணர்வோடு இருப்பேன்

ஆடுகளத்தில் நான் அவருக்கு பல பயனுள்ள குறிப்புகளை அளிப்பேன். நான் எப்பொழுதும் களத்தில் நின்று ஃபில்டிங் மட்டும் செய்பவன் இல்லை. போட்டி இறுக்கமாக இருக்கும்போது நான் எப்போதும் அவரிடம் செல்வேன். நான் எப்போதும் விளையாட்டு உணர்வோடு இருப்பேன். நான் ஒருபோதும் ஸ்கோர்போர்டை மட்டும் பார்த்ததில்லை. ஆடுகளம் நமக்கு என்ன செய்கிறது; சூழல்கள் எப்படி இருக்கின்றன; எதிரணி பேட்டிங் பார்டனர்ஷிப்பை  முறியடிக்க நாம் என்ன செய்யலாம்; அந்த வகையான விஷயங்கள் அனைத்தையும் பற்றி நான் அதிகம் தெரிந்துகொண்டேன். நான் தெரிந்துகொண்டதையும், அவர் வெகு சீக்கிரமே புரிந்து கொண்டார்.

அதனால்தான் எங்கள் இடையேயான உறவு மிகவும் சுமுகமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் எப்படி கேப்டனாக இருந்தார் மற்றும் இவ்வளவு காலம் அவர் எப்படி செயல்பட்டார் என்பது குறித்து அவர் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு.

'எப்போதும் மரியாதை உடன் இருக்கிறேன்'

தோனி என்று வரும்போது எனக்கு எந்த விதமான தீய எண்ணங்களும் இருந்ததில்லை. 'நான்தான் இருக்க வேண்டும்' என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றவில்லை. அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார், நான் அவரிடம் சென்று எதையும் பேச முடியும். எனவே, நான் எப்போதும் அவர்மீது மிகவும் மரியாதையுடன் இருக்கிறேன். 

நான் கேப்டனானபோதும் அப்படித்தான். அவர் எல்லா நேரத்திலும் எனக்கு அறிவுரை வழங்குவார், இந்த நேரத்தில் நான் இந்த திட்டத்தை பயன்படுத்த விரும்பவில்லை; இந்த திட்டத்தைப் பயன்படுத்துவோம் என்று என்னால் அவரிடம் சொல்ல முடிந்தது. மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது" என்றார்.   

மேலும் படிக்க | 145 ஆண்டுகளில் முதல்முறை! டெஸ்ட் கிரிக்கெட்டில் சரித்திரத்தை மாற்றி எழுதும் ஹாரி புரூக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News