Pakistan Cricket Players Salary: இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தங்களது முன்னணி வீரர்களின் சம்பளத்தை கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஏ-பிரிவு வீரர்களான பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் உள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி, இந்த மூவருக்கும் ஒரு மாதத்திற்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 4.5 மில்லியன் (தோராயமாக 15,900 அமெரிக்க டாலர்) சம்பளத்தை பெற உள்ளனர். முன்னதாக, அவர்களுக்கு மாத வருமானம் 4700 அமெரிக்க டாலராக இருந்தது. ஜூன் மாதத்துடன் இந்த ஒப்பந்தம் காலாவதியானது. மேலும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இருந்தனர். ஆனால் புதிய ஒப்பந்தம் அவர்களுக்கு நிறைய ஊக்கத்தை அளிக்கும் என தெரிகிறது. 


விரைவில் புது ஒப்பந்தம்


மாதந்தோறும் 15,900 அமெரிக்க டாலர் வருமானம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 1.5 கோடிக்கு மேல் (INR) அவர்கள் சம்பாதிக்க உள்ளனர். முன்னதாக, பாபர், அஃப்ரிடி மற்றும் ரிஸ்வான் ஆகியோர் மாதம் ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகவும், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் குறைவாகவும் சம்பாதித்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது. பாகிஸ்தான் வீரர்கள் உலகிலேயே மிகவும் ஏழ்மையாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் விரைவில் இதனை மாற்றும். 


மேலும் படிக்க | ஆசியக் கோப்பை போட்டிகளில் அதிரடியாய் பந்து வீசி சாதித்த இந்திய பவுலர்கள்


சிவப்பு பந்து மற்றும் வெள்ளை வீரர்கள் பிரிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் கடந்த ஆண்டு வடிவமைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்குகிறது. இனி, நான்கு பிரிவுகள் இருக்கும். மேலே உள்ள A வகையைப் குறித்த ஏற்கனவே பார்த்தோம். 'பி' வகை வீரர்கள் 10,600 அமெரிக்க டாலர்களை மாதாமாதம் பெறுவார்கள், மேலும் 'C' மற்றும் 'D' பிரிவில் இருப்பவர்கள் மாதத்திற்கு 2650 அமெரிக்க டாலர்கள் முதல் 5300 அமெரிக்க டாலர்கள் வரை பெறுவார்கள். 


ஐசிசியின் வருமானமும்...


அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஐசிசியின் வருமானமும் அதிகரிக்கும். முந்தைய சுழற்சியில் அவர்கள் சம்பாதித்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகப் பெறுவார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 34 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெறும். இந்த மிகப்பெரிய உயர்வு அவர்கள் தங்கள் வீரர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க உதவும்.


நிலவும் சிக்கல்


பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச வீரர்களை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் பணம் அதிகம் உள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடுவதில்லை மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற ஃபிரான்சைஸ் அடிப்படையிலான டி20 லீக்குகளில் விளையாட விண்ணப்பிக்கும் போது பல ஆவணச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.


இந்தியா - பாகிஸ்தான்: ஒப்பீடு


இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடும் போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒரே அளவில் ஊதியம் வழங்கப்படவில்லை. BCCI நான்கு கிரேடுகளைக் கொண்டுள்ளது: A+, A, B மற்றும் C என்பதாகும். A+ கிரேடு வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். புதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தங்களின்படி பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் பெறுவதை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாக இந்திய A+ பிரிவில் உள்ள வீரர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி பெறுகிறார்கள். கிரேடு A வீரர்கள் ரூ. 5 கோடியும், கிரேடு B வீரர்கள் ஆண்டுக்கு ரூ. 3 கோடியும் பெறுகிறார்கள். C கிரேடு வீரர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்தங்கள் உலகிலேயே சிறந்தவையாகும். 


மேலும் படிக்க | 'நானும் ஓய்வு பெறுகிறேன்' அடுத்தடுத்து ஓய்வை அறிவிக்கும் இங்கிலாந்து வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ