டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இயக்குனர் கவுதம் மேனனின் மகன்!
பிரபல இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனனின் மூத்த மகன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான திரைப்பட பாணியை உருவாக்கி, தற்போதைய தலைமுறையில் பல இளம் இயக்குனர்களுக்கு உத்வேகம் அளித்தவர் பிரபல திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் இளைஞர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும். அவரது 'மின்னலே', 'விண்ணைத் தாண்டி வருவாயா' மற்றும் 'நீ தானே என் பொன் வசந்தம்' போன்ற ரொமான்டிக் படங்களுக்கு ரசிகர்களிடம் இன்றளவும் வரவேற்பு உள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'காக்க காக்க' மற்றும் 'வேட்டையாடு விளையாடு' போன்ற படங்கள் நன்கு வெற்றிபெற்றது.
மேலும் படிக்க | பிரபாஸ் படத்தில் நடிக்க பிரித்விராஜ் போட்ட கண்டிஷன்!
தற்போது கவுதம் வாசுதேவ் மேனனின் மகன், ஆர்யா யோஹன் மேனன் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார். 19 வயதாகும் இவர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கும் எதிராக வீசிய முதல் பந்திலேயே எதிரணியை விக்கெட் பெற செய்து வீழ்த்தி பிரபலமாகியுள்ளார். 11 ரன்கள் எடுத்து குவித்த சேலம் ஸ்பார்டன் அணியின் ஜாஃபர் ஜமாலை முதல் ஓவரிலேயே ஆர்யா யோஹன் மேனன் வீழ்த்தியுள்ளார்.
மேலும் ஆர்யா யோஹன் மேனன் மூன்று ஓவர்களில் இருபத்தி ஆறு ரன்கள் மற்றும் ரன் அவுட் செய்தார். ஆர்யாவின் அணி இந்த கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளுடன் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் ஆர்யா மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR