பிரபாஸ் படத்தில் நடிக்க பிரித்விராஜ் போட்ட கண்டிஷன்!

கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடிகர் பிரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 27, 2022, 09:15 AM IST
  • கேஜிஎப் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபாஸ்.
  • முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரிதிவிராஜ்.
  • அடுத்த ஆண்டு சலார் படம் வெளியாக உள்ளது.
பிரபாஸ் படத்தில் நடிக்க பிரித்விராஜ் போட்ட கண்டிஷன்! title=

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி-2' படங்கள் மூலம் தென்னிந்திய திரையுலகில் எவராலும் அசைக்க முடியாத ஒரு வரலாற்றை படைத்த நடிகர் என்றால் அது பிரபாஸ் தான்.  எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த இரண்டு படங்களுமே உலகமெங்கிலும் ஆயிரக்கணக்கான கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.  இந்த பிரம்மாண்ட படங்களில் ரம்யா கிருஷ்ணன், ராணா, சத்யராஜ், அனுஷ்கா ஷெட்டி, நாசர், தமன்னா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.  இன்றுவரை இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு சர்பிரைஸ்! 'வாரிசு' படத்தில் ரீமிக்ஸ் ஆகும் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்!

இதனை தொடர்ந்து சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சாஹா' மற்றும் 'ராதே ஷ்யாம்' போன்ற படங்கள் ஓரளவு வசூலை ஈட்டினாலும், விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை.  தற்போது நடிகர் பிரபாஸ், 'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப்-2' படம் மூலம் பிரபலமான இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது, இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹாசன் நடிக்கிறார்.  அதனைத்தொடர்ந்து மலையாள பிரபலம் பிரித்விராஜ் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனேவே தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இயக்குனரும்-நடிகருமான பிரித்விராஜ் முதன்முறையாக இப்படத்தில் தனது ஈடுபாடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  இந்த படத்தில் என்னை கவர்ந்தது நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் பிரஷாந்த் நீல் தான் ஆனால் சில காரணங்களால் அவர்களோடு என்னால் இணங்க முடியவில்லை என்று கூறினார்.  மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரபாஸ் மற்றும் எனது தேதிகளில் சற்று மாற்றம் ஏற்பட்டு, தற்போது அது சரியாகி உள்ளது.  'சலார்' படம் எந்தெந்த மொழிகளில் வெளியாகுகிறதோ, அந்த மொழிகளில் எல்லாம் நான்தான் டப்பிங் செய்வேன்  என்று இயக்குனர் பிரஷாந்த் நீல்-இடம் கூறியதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஹிந்தி படத்தில் நடிக்க விரும்புகிறேன் - அருண் விஜய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News