புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா. அவரின் சாதனைக்கு இந்தியா முழுவதும் பெருமைப்படுகிறது. 135 கோடி இந்தியர்களும் பெருமிதம் கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ஜெர்மனியில் உள்ள குக்கிராமம் ஒன்றும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? 


கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் இந்திய வீரர்கள் ஆக்கப்பூர்வமாக விளையாடினார்கள். அதிலும் ஈட்டி எறிதல் போட்டியில் முதல்முதலாக இந்தியாவுக்காக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதற்கு முன்னதாக துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அபினவ் அபிஜித் பிந்த்ரா மட்டுமே இந்தியாவின் ஒலிம்பிக் தங்கக் கனவை நனவாக்கியிருக்கிறார்.


Also Read | Olympics: விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்? சாத்தியமா? உண்மை என்ன?


பரிசு மேடையில் இந்திய தேசிய கீதம் இசைத்தபோது கோடிக்கணக்கான இந்தியர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். அதிலும் நீரஜ் சோப்ரா டோக்கியோவில் இருந்து இந்தியாவிற்கு வந்தபோது மக்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். இது இயல்பானது தான்.


ஆனால், இந்தக் கொண்டாட்டங்கள் நம் நாட்டில் மட்டுமல்ல, கண்டம் விட்டு கண்டம் தாவிவிட்டது. தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள குக்கிராமம் ஒன்றுக்கு நீரஜ் சோப்ராவின் வெற்றி ஏன் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது?


Also Read | Olympic இல் இருந்து குதிரையேற்ற போட்டிகள் நீக்கப்படுகிறதா? காரணம் என்ன?


ஜெர்மனியில் உள்ள ஒபெர்ஷ்லெட்டன்பாக் என்ற சிறிய கிராமமும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கொண்டாட்டத்தில் இணைந்தது. ஏனென்றால், இந்த மாபெரும் வெற்றியின் பின்னணியில் இருப்பவர் இந்த கிராமத்தை சேர்ந்த டாக்டர் கிளாஸ் பார்டோனியெட்ஸ் (Dr Klaus Bartonietz) தான்.


73 வயதான பயிற்சியாளர் பார்டோனீட்ஸ், பயோமெக்கானிக்கல் நிபுணர். நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சியாளராக இருந்த பார்டோனியெட்சுக்கும் நீரஜ் சோப்ராவின், வெற்றியில் முக்கியமான பங்களிப்பு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு தனது வீட்டிற்கு திரும்பிய பார்டோனியெட்ஸுக்கு மக்களின் வாழ்த்து அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்து குவிந்தன.


அதிலும் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை ஏற்படுத்திய அந்த இறுதி கணத்தில், தனது ஈட்டி எங்கு சென்று விழுந்தது என்று தெரியாத நிலையிலும், வெற்றிகான சைகை காட்டியது அனைவருக்கும் பிடித்திருந்ததாக பார்டோனியெட்ஸின் அண்டை வீட்டினர் சொன்னார்களாம்.


Also Read | ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பளுதூக்குதல், குத்துச்சண்டை போட்டிகள் நீக்கப்படுமா?


ஜெர்மன் பயிற்சியாளர் டாக்டர் கிளாஸ் பார்டோனீட்ஸ் இப்போது அவரது கிராமத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.  


நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனக்கு இப்போது வரும் அழைப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டதாக பர்டோனியெட்ஸ் கூறுகிறார். நீரஜ் சோப்ராவைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக மக்கள் அவரை அழைக்கிறார்கள் என்று தனது மாணவரைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார் பயிற்சியாளர். 


அதுமட்டுமல்ல, தற்போது நிறைய விளையாட்டு வீரர்களும், பிற பயிற்சியாளர்களும் தன்னை அழைப்பதாக கூறும் அவர், ஒரே இரவில் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை உணர்ந்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று பார்டோனியெட்ஸ் கூறுகிறார்.


Also Read | உலக கோப்பை கிரிக்கெட்: 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி


அதேபோல் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் Uwe Hohn ஜெர்மனியை சேர்ந்தவர்.  அவரது சொந்த ஊரான ரெயின்ஸ்பெர்க்கில் அவருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. 8000 மக்கள் வசிக்கும் நகரத்தில், நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது மிகவும் பிரபலமாக இருக்கிறதாம்.  


நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக்கின் செயல்திறன் பற்றி பலரும் தன்னிடம் நீண்ட நேரம் பேசுவதாக அவர் கூறினார். இந்தத் தலைமுறையின் தலைசிறந்த ஈட்டி எறிபவரான ஹான், நீரஜ் சோப்ராவுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே பயிற்சி அளித்து வருகிறார். இவரது பயிற்சியை பெற்ற நீரஜ் சோப்ரா, ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கோப்பைகளை வென்றார்.  


100 மீட்டருக்கு மேல் எறிந்த உலகின் ஒரே ஈட்டி எறியும் வீரர் உவே ஹான் என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | Salute the Olympic Gold! நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR