Olympic இல் இருந்து குதிரையேற்ற போட்டிகள் நீக்கப்படுகிறதா? காரணம் என்ன?

டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரை ஒன்றுக்கு படுகாயம் ஏற்பட்டதால் கருணைக்கொலை செய்யும் நிலைமை ஏற்பட்டது. மனிதர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் விலங்குகளுக்கு என்ன வேலை?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 14, 2021, 02:28 PM IST
  • ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து குதிரையேற்ற போட்டிகள் நீக்கப்படுகிறதா?
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரை ஒன்றுக்கு படுகாயம் ஏற்பட்டதால் கருணைக்கொலை செய்யும் நிலைமை ஏற்பட்டது
  • மனிதர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் விலங்குகளுக்கு என்ன வேலை?
Olympic இல் இருந்து குதிரையேற்ற போட்டிகள் நீக்கப்படுகிறதா? காரணம் என்ன? title=

எதிர்வரும் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து குதிரையேற்றம் தொடர்பான அனைத்து விளையாட்டுகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பீட்டா (People for the Ethical Treatment of Animals) அமைப்பு, ஒலிம்பிக்கில் இருந்து அனைத்து குதிரையேற்ற நிகழ்வுகளையும் அகற்ற வலியுறுத்தியுள்ளது.

விலங்குகளுக்கான நெறிமுறை சிகிச்சைக்கான இந்த அமைப்பு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (International Olympic Committee) தலைவர் தாமஸ் பாக்-குக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், சமீபத்தில் முடிவடைந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் போது நடந்த ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டி, குதிரையேற்றம் விளையாட்டு மீதான சர்ச்சையை பீட்டா (PETA) சுட்டிக் காட்டுகிறது.

Also Read | Athletes Uniform: வீராங்கனைகளின் சீருடை சிக்கலும், அவர்கள் கடந்த வந்த பாதையும்

ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கின் போது, ஜெர்மன் பென்டாத்லான் போட்டியாளரான அன்னிகா ஷ்லூ (Annika Schleu), தனது குதிரை செயிண்ட் பாய் மைதானத்திற்குள் நுழைய மறுத்ததைத் தொடர்ந்து, சாட்டையால் அடித்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

ஷ்லேயுவின் பயிற்சியாளர், கிம் ரைஸ்னர் (Kim Raisner) குதிரையைத் தாக்கியதையும் பீட்டா சுட்டிக் காட்டுகிறது. போட்டியின் போது குதிரையை அடித்ததற்காக பயிற்சியாளர் கிம் ரைஸ்னர் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், "அபராதம் மற்றும் இடைநீக்கம் போதாது" என்று கூறும் பீட்டா (PETA), இது போன்ற நிகழ்வுகளை பிற குதிரைகளும் எதிர்கொள்ளலாம் என்பதை மறுக்கமுடியாது என்று கூறுகிறது.

Also Read | Olympics: விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்? சாத்தியமா? உண்மை என்ன?
 
டோக்கியோ விளையாட்டு  போட்டிகளைத் தவிர, குதிரையேற்றப் போட்டியில் வேறு இரு நிகழ்வுகளையும் PETA குறிப்பிட்டது. ஒரு ஜெட் செட்டில், சுவிட்சர்லாந்து போட்டியாளர் ராபின் கோடெல் ஓட்டிய குதிரை மிகவும் காயமடைந்தது. எனவே, அந்தக் குதிரை கருணைக்கொலை செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஐரிஷ் ரைடர் சியான் ஓ'கானர் (rider Cian O'Connor) தனது குதிரையான மவுண்ட் கில்கென்னி (mount Kilkenny)இன் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த போதும் விளையாட்டில் கட்டாயமாக ஈடுபடுத்தியதையும் பீட்டா சுட்டிக் காட்டுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, பீட்டா எழுதியுள்ள கடிதத்தில், "ஸ்கேட்போர்டிங், சர்ஃபிங் மற்றும் ஸ்போர்ட் க்ளைம்பிங் போன்ற டோக்கியோ விளையாட்டுகளில் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. பலரும் விரும்பும் விளையாட்டுகளை புதிதாக சேர்ப்பது போல, பொதுமக்களால் ஆதரிக்கப்படாத விளையாட்டுகளை அகற்றுவதற்கான நேரம் இது" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Also Read | ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பளுதூக்குதல், குத்துச்சண்டை போட்டிகள் நீக்கப்படுமா?
 
"ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மனித விளையாட்டு வீரர்களுக்கானது. போட்டியிடத் தேர்வு செய்யாத குதிரைகளை ஏன் அதில் ஈடுபடுத்தி காயப்படுத்த வேண்டும்? சில சமயங்களில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து அவை ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றன" என்று PETA தலைவர் இங்க்ரிட் நியூகிர்க் கூறினார்.

பீட்டாவின் இந்தக் கடிதத்திற்கு, இதுவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்து எந்த கருத்தோ, பதிலோ வரவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரை ஒன்றுக்கு படுகாயம் ஏற்பட்டதால் கருணைக்கொலை செய்யும் நிலைமை ஏற்பட்டது. மனிதர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் விலங்குகளுக்கு என்ன வேலை? என்ற கேள்வி பல நாட்களாக எழுப்பட்டு வருகிறது. 

ஆனால்,சர்வதேச அளவில் விளையாட்டுகளில் மனிதர்களும் விலங்குகளும் இணைந்து செயல்படுவது தொன்று தொட்டு வரும் வழக்கம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஜல்லிக்கட்டு, ஏர் தழுவுதல், குதிரை பந்தயம் என விலங்குகள் பன்னெடுங்காலமாக மனிதர்களின் விளையாட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Also Read | Salute the Olympic Gold! நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News