PUBG Mobile Global Championship 2020: அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள PUBG மொபைல் குளோபல் சாம்பியன்ஷிப் போட்டிகள் (PMGC) இறுதிப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன PMGC 2020 லீக் நிலை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது, அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள PMGC 2020 இறுதிப் போட்டிக்கு 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Four Angry Men அணி, ஆண்கள் லீக் கட்டத்தை முதலிடத்திலும், பிகெட்ரான் ரெட் ஏலியன்ஸ் (Bigetron Red Aliens) இரண்டாவது இடத்திலும், ஆர்.ஆர்.க்யூ அதீனா (RRQ Athena) PUBG மொபைல் போட்டியில் மூன்றாவது இடத்திலும் வந்தனர்.


Four Angry Men அணியைச் சேர்ந்த Zhong "33Svan" Hongsen  பி.எம்.ஜி.சி 2020 லீக் MVPயாக முடிசூட்டப்பட்டது.


Also Read | 2021 ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து Roger Federer விலகியது ஏன்?
 
PMGC 2020 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் (Team):


1. Four Angry Men


2. Bigetron Red Aliens


3. RRQ Athena


4. Konina Power


5. Klas Digital Athletics


6. Secret Jin


7. Futbolist


8. Nova XQF


9. POWER888 KPS


10. Abrupt Slayers


11. Alpha7 Esports


12. Z3US Esports


13. Natus Vincere


14. Aerowolf Limax


15. Team Secret


16. A1 Esports


Also Read | ICC Award: ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார் MS Dhoni; யாருக்கெல்லாம் விருது கிடைத்தது


PMGC 2020 இறுதிப் போட்டிகள் 2021 ஜனவரி 21 அன்று தொடங்கி, ஜனவரி 24 வரை நடைபெறும். இது துபாயிலிருந்து (Dubai) உலகளவில் ஒளிபரப்பப்படும். இறுதிப் போட்டிகளை பொதுமக்கள் பார்க்க முடியாது. ஆஃப்லைன் விளையாட்டில் அணிகளுக்கு ஒரு சமமான வாய்ப்பு வழங்கப்படும்.


PMGC பைனல்ஸ் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் ($2,000,000 USD)! இதுவரையில் PUBG மொபைல் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது. PUBG  (PUBG) மொபைல் எஸ்போர்ட்ஸின் (Mobile Esports) யூடியூப் (YouTube), பேஸ்புக் (Facebook) மற்றும் ட்விச் (Twitch) சேனல்களில் PMGC 2020 இறுதிப்போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 


Also Read | Australia vs India 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்களை பந்தாடிய இந்திய பந்துவீச்சாளர்!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR