ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆஸ்திரேலியா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து. இருப்பினும், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரின் பந்து வீச்சில் டாப்-எட்ஜ் செய்யப்பட்ட புல் ஷாட்டை மார்க் உட் கேட்ச் எடுப்பதைத் தடுத்ததால், போட்டி சர்ச்சையில் சிக்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் 17வது ஓவரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், மேலே சென்ற பந்தை பிடிக்க விடாமல் மேத்யூ வேட் தடுப்பதைக் காணலாம். இருப்பினும், இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் புகார் அளிக்காமல், வேட் செய்ததை அப்படியே விட்டுட்டு சென்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!


"நான் முழு நேரமும் பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அதனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அமபயரிடம் மேல்முறையீடு செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டார்கள், ஆனால் நாங்கள் ஆஸ்திரேலியாவில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும். பயணத்தின் ஆரம்பத்திலேயே இந்த மாதிரி பிரச்னைகள் வேண்டாம் என்று நினைத்தோம்" என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தனது போட்டிக்கு பிந்தைய பேட்டியில் கூறினார். மேத்யூ வேட் வுட்டை கையால் தடுப்பதைக் காணலாம், இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


 



ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டி20 பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. பட்லர் 32 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த நிலையில், ஹேல்ஸ் 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்காக ஹரி புரூக், மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் முறையே 12, 10 மற்றும் 13 ரன்களை பெற்றனர்.  ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 20 ஓவர்களில் 200/9 என்று கட்டுப்படுத்தியது. கடைசி ஓவரில் சாம் குர்ரன் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெரும் கட்டத்தில் இருந்தது. இருப்பினும், வார்னர் மற்றும் ஸ்டோனிஸ் முறையே 73 மற்றும் 35 ரன்களில் மார்க் வுட்டால் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களில் வூட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான ஆட்டத்திற்காக ஹேல்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேலும் படிக்க | கோடிக்கணக்கில் ஐபிஎல் சம்பளம்! ஆனாலும் உலக கோப்பையில் இடம் இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ