இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 38-வது லீக் ஆட்டம் எட்க்பாஸ்டன், பிர்மிங்க்ஹாம் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதிலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 66(57), ஜானி பாரிஸ்டோவ் 111(109) ரன்கள் குவித்து அணிக்கு அபார துவக்கத்தை அளித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 79(54) ரன்கள் குவித்தார்.


இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 337  ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் மொகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 


இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் ரன் ஏதும் இன்றி வெளியேற, மறு முனையில் ரோகித் சர்மா 102(109), விராட் கோலி 66(76) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், போதுமான பந்து இல்லாத நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்குள் 306 ரன்கள் மட்டுமே குவித்தது இந்தியா. 



ஹார்திக் பாண்டயா அதிரடியாக விளையாடி 45(33) ரன்கள் குவித்தார், டோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 42*(31) ரன்கள் குவித்தார். எனினும் இவர்களது உழைப்பு பலன் அளிக்கவில்லை. 


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் அரையிறுதி வாய்ப்பு மேலும் கடினமானதாக மாறியுள்ளது.