உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் அப்கானிஸ்தான் அணிகள் மோதின.


இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 என்னும் இமாலைய இலக்கை நிர்ணயித்தது.


அணியில் அதிகப்பட்சமாக எயின் மோர்கன் 148(71) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஜானி பாரிஸ்டோவ் 90(99), ஜோ ரூட் 88(82) ரன்கள் குவித்தனர். அப்கானிஸ்தான் தரப்பில் ஜட்ரான், குல்பதின் நபி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


இதனையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அப்கானிஸ்தான் களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய நூர் அலி ஜாட்ரன் 0(7) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அப்கானிஸ்தான் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் முட்டுமே குவிக்க முடிந்தது. 


அணியில் அதிகப்பட்சமாக ஹஸ்மதுல்லா சாயிதி 76(100) ரன்கள் குவித்தார். ராஹமத் ஷா 46(74), அஷ்கர் அப்கான் 44(48) என அரை சதங்களை தவறவிட்டனர். இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர், அடில் ரசீட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மோர்கன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இப்போட்டியல் பெற்று வெற்றியின் மூலம் இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.