Cricket News In Tamil: ஐசிசி டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இங்கிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன் பில் சால்ட் (Phil Salt) யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னேறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பில் சால்ட் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்ததன் மூலம், தற்போது டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் 185 ஸ்ட்ரைக் ரேட்டில் ஐந்து போட்டிகளில் 331 ரன்கள் எடுத்தார். அதன் பலன் அவருக்கு கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். ரிஸ்வான் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானை விட 15 ரேட்டிங் புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார் பில் சால்ட். 


மேலும் படிக்க - Year End 2023: இந்திய கிரிக்கெட்டை ஆளப்போகும் டாப் 7 நட்சத்திரங்கள்


ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத பில் சால்ட்


2024 இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) ஏலத்தில் அந்த அணியும் பில் சால்ட்டை ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத இங்கிலாந்து நட்சத்திரம் பில் சால்ட் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரான சால்ட், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து தரவரிசையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளார்.


ஐசிசி டி20 தரவரிசை சூர்யகுமார் யாதவ் முதலிடம்


அதேநேரத்தில் ஐசிசி (International Cricket Council) டி20 தரவரிசையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இன்னும் முதலிடத்தில் நீடிக்கிறார். சூர்யாவின் ரேட்டிங் 887 ஆகும். இங்கிலாந்தின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் ரேட்டிங் 802 ஆக உள்ளது. 


ஐசிசி டி20 தரவரிசை: பின்னுக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் வீரர்


இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 787 புள்ளிகளை பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் 755 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறார். அதேசமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 734 மதிப்பெண்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.


மேலும் படிக்க - Cricket Controversies 2023: இந்த ஆண்டில் கிரிக்கெட் களத்தில் நடைபெற்ற சர்ச்சைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ