ரிங்கு சிங் முதல் சுப்மான் கில் வரை இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் 7 நட்சத்திரங்கள் யார் என பார்க்கலாம்
27 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா தனது பினிஷிங் திறமை மற்றும் கிளீன் ஹிட்டிங் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். இறுதி கட்ட ஓவர்களில் விளையாடும்போது, அதாவது கடைசி நான்கு ஓவர்களில் அவரது ஸ்டிரைக் ரேட் பிரமிக்க வைக்கிறது. இதனால் இவருக்கும் இந்திய அணியில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
முகேஷ் சர்மா, 25 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர். உள்நாட்டு கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஸ்விங் பந்துவீச்சு மற்றும் முக்கிய விக்கெட்டுகளை எடுப்பதற்கான திறமை அவருக்கு இந்திய அணியில் இடம்பெற்றுக் கொடுத்துள்ளது. அடுத்த ஸ்டார் பவுலராக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் அடுத்த ஷேவாக் தான் ரிங்கு சிங் என பலரும் புகழந்து தள்ளுகின்றனர். அந்தளவுக்கு அதிரடி பேட்டிங் ஆடக்கூடியவராக இருக்கிறார் ரிங்கு. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சரவெடியாக வெடித்த அவர், இந்திய அணியிலும் இடம்பிடித்து அதிரடி பேட்டிங் மூலம் நிரந்தர இடத்தை உறுதி செய்துவிட்டார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி முத்திரை பதித்த திலக் வர்மா, இந்திய அணிக்கும் தேர்வாகியுள்ளார். அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் கவனிக்க வைத்திருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சராசரி 42.88, 164.11 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடினார். இவருக்கு இந்திய அணியில் பிரகாசமாக எதிர்காலம் காத்திருக்கிறது.
21 வயதான இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஷ்வால் அச்சமற்ற பேட்டிங் திறன் கிரிக்கெட் உலகையே உற்றுநோக்க வைத்தது. 14 ஐபிஎல் போட்டிகளில், அவர் 48.08 சராசரி மற்றும் 163.61 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 625 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு ஐபிஎல்லில் சதம் அடித்துள்ளார். இந்திய அணியிலும் இடம்பிடித்துவிட்டார்.
சுப்மன் கில் இல்லாமல் வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியல் முழுமையடையாது. அவர் ஒருநாள் அணியில் தனது இடத்தை இந்த ஆண்டில் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் இந்த ஆண்டு 2,000 சர்வதேச ரன்களை எட்டிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். கில் இந்த ஆண்டு 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களுடன் 1,584 ரன்கள் எடுத்துள்ளார். 17 ஐபிஎல் போட்டிகளில், அவர் 59.33 சராசரி மற்றும் 157.80 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 890 ரன்கள் எடுத்தார்.