நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்தில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரிலன் முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங்க் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக ரோஸ் டெய்லர் 44(35) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக டிம் செய்ப்ரீட் 32(26) ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் கிறிஸ் ஜோடர்ன் 2 விக்கெட் வீழ்த்தினார்.



இதனைத்தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்களை அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜானி பாரிஸ்டோ 35(28), டெவிட் மெளன் 11(13) ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை அளிக்க இவர்களை தொடர்ந்து வந்த ஜேம்ஸ் வின்ச் 59(38) ரன்க்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 


ஆட்டத்தின் 18.3-வது பந்தில் 154 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி, அப்போது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. நியூசிலாந்து வீரர் மிட்சல் சாட்னர் மட்டும் இந்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். எனினும் அவரது முயற்சி இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது.


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கம் இடையே நடைபெறும் இரண்டாவது டி20 போட்டி வரும் நவம்பர் 3-ஆம் நாள் வில்லிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.