ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டன் இவரா?
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக கடந்த ஆண்டு விளையாடிய டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருப்பதால், அந்தப் போட்டி மற்றும் 20 ஓவர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்காக கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றுள்ளது.
மேலும் படிக்க | Ind VS Eng: இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தலில் இந்திய அணி - மீளுமா?
கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கீழ் களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அணியுடன் செல்லாமல், சிகிச்சை முடித்துக் கொண்ட சென்ற அஸ்வின் இந்திய அணியுடன் இணைந்தார். பயிற்சி ஆட்டத்திலும் களமிறங்கியுள்ளார். ரிஷப் பன்ட், புஜாரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லீசெஸ்டர்ஷைர் அணிக்ககாக களமிறங்கியுள்ளனர். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ரோகித் சர்மா, 2வது இன்னிங்ஸ் விளையாட மைதானத்துக்கு வரவில்லை. ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சனிக்கிழமை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1 ஆம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது. அதனால், இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்ற கேள்வி எழுந்துள்ளது.
லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், கடந்தமுறை இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது கேப்டனாக இருந்த விராட் கோலி பெயரும் அடிபடுகிறது. ஆனால், கசப்பான அனுபவத்துடன் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியிருப்பதால், மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் பார்க்க பாக்.,கிரிக்கெட்டரை அழைத்த கங்குலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR