INDvENG 5வது டெஸ்ட்: ஏன் இந்தியா தோல்வி அடைந்தது -ஒரு பார்வை
இந்த டெஸ்ட் போட்டி பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி நிலைத்து நின்று விளையாடி வெற்றி பெறுமா? அல்லது டிரா நோக்கி செல்லுமா? இங்கிலாந்தின் பந்திவீச்சுக்கு முன்னால் இந்திய வீரர்கள் தாக்கு பிடிப்பார்களா?
ரிஷப் பந்த் 114(146) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். இந்திய அணி தனது ஏழாவது விக்கெட்டை இழந்து. வெற்றி பெற இன்னும் 136 ரன்கள் தேவை. தற்போது ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா விளையாடி வருகிறார்.
லோகேஷ் ராகுல் 149 (224) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். இந்திய அணி தனது ஆறாவது விக்கெட்டை இழந்து. வெற்றி பெற இன்னும் 139 ரன்கள் தேவை. ரிஷப் பந்துடன் இணைந்து ஜடேஜா விளையாடி வருகிறார்.
தற்போது இந்திய அணி 80 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல்* 148(222) மற்றும் ரிஷாப் பந்த்* 113(136) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
தற்போது தேநீர் இடைவேளை. இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல்* 142(210) மற்றும் ரிஷாப் பந்த்* 101(118) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதத்தை அடித்தார் ரிஷாப் பந்த். இவர் 117 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். அதில் 14 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும்.
இந்திய அணி 70 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 182 ரன்கள் தேவை.
லோகேஷ் ராகுல்* 140(190) மற்றும் ரிஷாப் பந்த்* 87(111) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
டெஸ்ட் ஆட்டத்தின் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை செய்தார் ரிஷாப் பந்த்.
நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்:
79* ரிஷாப் பந்த் v Eng, Oval, 2018
76* எம்.எஸ். தோனி v Eng, Lord's, 2007
67* பார்த்திவ் படேல் v Eng, Mohali, 2016
63 தீப் தாஸ்குப்தா v SA, Port Elizabeth, 2001
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் அரை சதத்தை அடித்தார் ரிஷாப் பந்த். தற்போது இந்திய அணி 60.2 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 232 ரன்கள் தேவை.
லோகேஷ் ராகுல்* 131(162) மற்றும் ரிஷாப் பந்த்* 50(78) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளின் உணவு இடைவேளை வரை இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 297 ரன்கள் தேவை. கைவசம் ஐந்து விக்கெட் உள்ளது.
தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்த லோகேஷ் ராகுல். 118 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் அடித்தார். இந்திய அணி வெற்றி பெற 43 ஓவர் முடிவில் 305 ரன்கள் தேவை
தற்போது இந்திய அணி 38 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல்* 77(101) மற்றும் ரிஷாப் பான்ட்* 4(5) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் ஸ்கோர் 120 ரன்கள் இருந்த போது அஜிங்கியா ரஹானே 37(106) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 0(6) ஆறு பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இந்திய அணி 100 ரன்களை கடந்தது. வெற்றி பெற இன்னும் 363 ரன்கள் தேவை. லோகேஷ் ராகுல்* 62(89) மற்றும் அஜிங்கியா ரஹானே* 29(96)
அரைசதத்தை அடித்த லோகேஷ் ராகுல்* 50(57) அவருடன் அஜிங்கியா ரஹானே* 11(57) விளையாடி வருகிறார். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 398 ரன்கள் தேவை.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் மூன்று போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியும், ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. இதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாகா ஹனுமா விகாரி சேர்க்கப்பட்டனர்
இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று, இந்திய அணி வெற்றி பெற 406 ரன்கள் தேவை. இந்தியாவிடம் ஏழு விக்கெட்கள் உள்ளன. இந்த டெஸ்ட் போட்டி பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி நிலைத்து நின்று விளையாடி வெற்றி பெறுமா? அல்லது டிரா நோக்கி செல்லுமா? இங்கிலாந்தின் பந்திவீச்சுக்கு முன்னால் இந்திய வீரர்கள் தாக்கு பிடிப்பார்களா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் எடுத்தது. இதனால் 40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 423 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இந்திய அணிக்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக கொடுக்கப்பட்டது. நான்காவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது.
இந்நிலையில், இன்று கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தியா வெற்றி பெற மேற்கொண்டு 406 ரன்கள் அடிக்க வேண்டும்.