தடுமாறும் இங்கிலாந்தை தாங்கிப் பிடிக்கும் ஜோஷ் பட்லர்!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லரின் நிதானமான ஆட்டத்தால் இங்கிலாந்து 300 ரன்களை எட்டியது!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லரின் நிதானமான ஆட்டத்தால் இங்கிலாந்து 300 ரன்களை எட்டியது!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி நடைப்பெற்று வருகிறது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை கண்டுவரும் இங்கிலாந்து அணியினை ஜோஸ் பட்லர் நிதானமான ஆட்டத்தால் தாங்கி பிடித்து வருகின்றார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரர்கள் ஜென்னிங்ஸ் மற்றும் குக் இருவரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 23 ரன்கள் இருக்கையில் ஜடேஜா பந்தில் ஜென்னிங்ஸ் வெளியேறினார். இதனையடுத்து, நன்றாக ஆடிவந்த குக் அரைசதம் கண்டார். முதல் 4 போட்டிகளில் மோசமாக ஆடிய குக், இந்த தொடரில் அடித்த முதக் அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்டதினை தடுமாற்றத்துடன் துவங்கிய போதும் முதல் நாள் இறுதியில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் நாள் இன்று துவங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ரசீத் 15(51) ரன்களில் வெளியேறினார். எனினும் நம்பிக்கை நட்சத்திரமான ஜோஷ் பட்லர் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார். அவருக்கு துனையாக ஸ்டுவோர்ட் போர்ட் துணை நின்று வருகின்றார்.
தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து 114 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ட்வோர்ட் போர்ட் 34(49) மற்றும் ஜோஷ் பட்லர் 62(100) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!