மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைத்து உலக கோப்பை பெறும் வாய்ப்பை இழந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

6_வது மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியா கயானாவில் நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.


இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைப்பெற்ற நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்கொண்ட இந்தியா போராடி தோல்வியடைந்தது.



ஆண்டிகுவா மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்தியா 6-வது ஓவருக்கு பின்னர் தடுமாறியது. இதன் காரணமாக ஆட்டத்தின் 19.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து இந்தியா 112 ரன்களை மட்டுமே குவித்தது. இந்தியா தரப்பில் ஸ்மிரிட்டி மந்தனா 34(24) ரன்கள் குவித்தார்.


இதனையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீராங்கனைகளை விரைவில் இழந்தாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடியது இதன் காரணமாக ஆட்டத்தின் 71.1-வது பந்தில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இங்கிலாந்த தரப்பில் எமி எலன் ஜோன்ஸ் 51(42), நட்டாலியா சச்சிவர் 54(43) ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.


இந்த வெற்றியின் மூலம் வரும் வரும் நவம்பர் 25 அன்று நடைப்பெறும் உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியினை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இன்று முன்னதாக நடைப்பெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.