2020 மார்ச் மாதம் நடைபெறவிருந்த IPL 2020 தொடரில் ‘பஞ்சாப் கிங்ஸ் XI(Kings XI Punjab)' அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்ததாக அதிரடி மட்டையாளர் KL ராகுல் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 13-ஆம் பதிப்பு மார்ச் 29, 2020 அன்று தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பணம் குவிக்கும் கிரிகெட் தொடர் அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும் வரை தள்ளி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) அறிவித்தது,


READ | T20 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் IPL இரண்டிலும் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா...


எனினும் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ICC) ரத்து செய்தால், IPL-ன் 13-ஆம் பதிப்பை நடத்திவிடலாம் என BCCI திட்டமிட்டுள்ளது. 


இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் XI(Kings XI Punjab) அணிக்கு தலைமை தாங்க இருந்த KL ராகுல் தனது பிந்தைய எதிர்பார்ப்பினை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் XI(Kings XI Punjab) அணியை 2018 மற்றும் 2019 ஆண்டு தொடர்களில் வழிநடத்திய தமிழக வீரர் ரவிசந்திர அஷ்வினை டெல்லி கேப்பிடல்ஸ் அணி IPL ஏலத்தில் தட்டி சென்ற நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் XI(Kings XI Punjab) அணியை வழிநடத்தும் வாழ்ப்பு ராகுல் வசம் வந்துள்ளது. நடைபெறவிருந்த IPL 2020 தொடரில் அவர் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கொரோனா தொற்றால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எதிர்பார்ப்பும் இடைகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தனது அணியின் சகா மயங்கள் அகவர்வாலுடன் இணைய அமர்வில் (Open Nets with Mayank) அமர்ந்த KL ராகுல், பஞ்சாப் கிங்ஸ் XI அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பு குறித்து மனம் திறந்தார். இதன்போது அவர் தெரிவிக்கையில்., "நான் உண்மையில் IPL தொடரை இழந்துள்ளேன். ஒரு அணிக்குத் தலைமை தாங்குவது என்பது எனக்கு ஒரு பெரிய பருவமாக இருந்திருக்கும், மேலும் எனது வரிசையில் சில அற்புதமான வீரர்களைப் பெற்றிருப்பதைப் போல உணர்ந்தேன். ஆனால் அனைத்தும் தற்போது தலைகீழாக மாறிவிட்டது. அணியில் கிறிஸ் கெய்ல், மேக்ஸி மற்றும் நீங்கள் என அனைவரும் விளையாட இருந்ததை எண்ணி ஆர்வமாக இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.


READ | COVID-19 மத்தியில் மகளிர் IPL போட்டிகளுக்கு கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது!...


இந்த வீடியோ உரையாடல் அமர்வில் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லும் இடம்பெற்று இருந்தார். இதன் போது அவர், "தான் இப்போது தான் ஒரு நீண்ட விடுப்பில் தனது வீட்டில் அடைந்திருப்பதாக" குறிப்பிட்டார்.


வாழ்க்கையில் இதுவும் ஒரு பகுதி தான். இயற்கையின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். எதை பற்றியும் அதிகமாக சிந்தித்து வருத்தப்பட தேவையில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.