இந்திய கிரிக்கெட் துறையில் குறிப்பாக கிரிக்கெட் வீராங்கனைகளிடையே அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் பெண்களுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL). ஆண்களுக்கான தொடர்களை போல் பெண்களுக்கான தொடரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தான். பல ஆண் கிரிக்கெட் வீரர்களும் பெண்கள் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸும் இந்த பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) நேரடி அமர்வில் பேசிய அவர் பெண்கள் IPL தொடர் ஏற்பாடு செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என்று ஜேமி தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டில் IPL போட்டிகளை நடத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் UAE!...
பெண்கள் IPL போட்டிகளை நடத்துவதால் பெண்களுக்குள் இருக்கும் திறனையை வெளிக்கொண்டு வர முடியும். எனவே மகளிர் IPL போட்டிகளை BCCI கொண்டுவர வேண்டும் எனவும் ஜேமி ரோட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் பிக்பாஷ் லீக், கியா சூப்பர் லீக்கை நாம் பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கான பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை எவ்வளவு மேம்படுத்தியுள்ளனர் என்பதை நாம் பார்க்க வேண்டும். நியூசிலாந்து தனது பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒரு லீக்கையும் தொடங்க உள்ளது. இதிலிருந்து புதிய திறமைகளும் வெளிப்படும். அது நிச்சயமாக நன்றாக இருக்கும். ஷெபாலி வர்மா போன்ற திறமைகள் நாட்டில் உள்ளது இதன் மூலம் கண்டறியப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இளம் வீராங்கனைகளுக்கு கூட்டத்திற்கு முன்னால் விளையாடுவது, மூத்த கிரிக்கெட் வீரர்களுடன் பழகும் அனுபவம் போன்றவை கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அனுபவங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதும் பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். IPL ஒப்பந்தத்தை BCCI விரைவில் எங்களுக்கு வழங்கும் என்று நம்புகிறேன் எனவும் இதன்போது அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"A Women's IPL is not only going to develop the game, it's going to get newer talents."
Jemimah Rodrigues spoke about how a full-fledged women's IPL could help advance the game in India during the 100% Innovation webinar. pic.twitter.com/xhYstRGBAo
— ICC (@ICC) June 13, 2020
அண்மையில், உலக மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் அணி இந்தியாவின் ரோஹித் சர்மா என்றும் அழைக்கப்படும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் மகளிர் IPL போட்டிகள் கொண்டுவருவது குறித்து விருப்பம் தெரிவித்திருந்தனர்.
IPL வரலாற்றில் அழியாத இடம் பிடித்த கிறிஸ் கெய்ல் மற்றும் பிராண்டன் மெக்கல்லம்!...
IPL-ல் பெண்களுக்கான கண்காட்சி போட்டியை BCCI செய்துள்ளது, எனினும் இந்த நேரத்தில் பெண்கள் IPL போட்டி குறித்து ஏற்பாடு செய்ய BCCI முடிவு செய்திருக்க மாட்டார்கள், ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாரியம் இந்த திசையில் ஒரு படி எடுத்துள்ளது. IPL -2018 இல் பெண்கள் கிரிக்கெட் வீரர்களின் கண்காட்சி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன, இது பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதன் பின்னர், BCCI கடந்த ஆண்டு மகளிர் T20 சேலஞ்ச் கோப்பையைத் தொடங்கியது, இதன் காரணமாக ஷெபாலி வர்மா போன்ற வலுவான திறமை வெளிவந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், விரைவில் BCCI பெண்கள் கிரிக்கெட் IPL நோக்கி சில நடவடிக்கையும் எடுக்கும் என்று நாம் நம்பலாம்.