இந்திய கிரிக்கெட் அணியில் இவனுக்கு இடமில்லைன்னா வேற யாருக்கு? ரவி சாஸ்திரி ஆருடம்
Ravi shasthiri: ராஜஸ்தான் ராயல் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி சொல்லும் ஆரூடம் என்ன தெரியுமா?
புதுடெல்லி: நடப்பு 2023 சீசனில், 12 போட்டிகளில் விளையாடி 575 ரன்களை குவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆர்சிபியின் ஆரஞ்சு கேப் ஹோல்டர் ஃபாஃப் டு பிளெசிஸை விட யஷஸ்வி ஒரே ஒரு ரன்கள் பின்தங்கியுள்ளார். மும்பை அணியை சேர்ந்த சூர்ய குமார் யாதவ் 12 போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் குவித்து 3 ஆவது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விரைவில் விளையாடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 60வது போட்டிக்கு முன்னதாக ரவி சாஸ்திரி தெரிவித்த கருத்து அனைவராலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் போட்டிகளிலேயே மிகவும் அதிக ரன் கொடுத்த ஓவர்களை வீசிய பவுலர்கள்
"தேர்வுக்குழுவினர் ஜெய்ஸ்வாலை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும், அவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாடுவார். அவரைப் பற்றிய சிறந்த விஷயம், அவர் தனது திறமையை உயர்த்திய விதம் ஆகும். அவரது ஆட்டத்தில் சக்தி உள்ளது, நேரமும் உள்ளது. அவருக்கு பிரகாசமான எதிர்கால வாய்ப்புகள் உள்ளன," என்று சாஸ்திரி கூறினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான பேட்டியில் ரவி சாஸ்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸின் கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஜெய்ஸ்வால் வெறும் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்ததன் பின்னணியில் சாஸ்திரியின் கருத்துக்கள் வந்துள்ளன. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தை வெறும் 13 பந்துகளில் எடுத்திருந்தார்.
இது ஒட்டுமொத்த டி20யில் இரண்டாவது அதிவேக ரன் குவிப்பு ஆகும். 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் KKR பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொண்டது அனைவராலும் பாராட்டபப்ட்டது. மேலும், அவரது இந்த அதிரடி ரன் குவிப்பு, அவரது அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியதுடன், அவர்களின் நிகர ரன்-ரேட் மற்றும் பிளேஆஃப் வாய்ப்புகளை உயர்த்தியது.
2020ல் ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்ட பிறகு ஐபிஎல் தரவரிசையில் ஜெய்ஸ்வால் முன்னேறி வருகிறார். அவர் தனது தொடக்க சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி அதில் அதிகபட்சமாக 34 ரன்களுடன் 40 ரன்கள் எடுத்தார்.
அடுத்த சீசனில் ஜெய்ஸ்வால் 24.90 சராசரியில் 249 ரன்களையும் ஒரு அரைசதத்துடன் 148.21 ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார்.
2022 ஆம் ஆண்டில், ஜெய்ஸ்வால் 10 ஆட்டங்களில் 25.80 சராசரியில் 258 ரன்கள் எடுத்து, தனது சாதனையை மேம்படுத்தினார், ஆனால் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் 132.99. 2022 சீசனில் அவர் இரண்டு அரைசதங்களை அடித்தார்.
நடப்பு 2023 சீசனில், சவுத்பா ஏற்கனவே 12 போட்டிகளில் 575 ரன்களைக் குவித்த அவர், இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கும் ஆர்சிபியின் ஆரஞ்சு கேப் ஹோல்டர் ஃபாஃப் டு பிளெசிஸை விட முன்னேறுவாரா என்பதை எஞ்சியிருக்கும் சில போட்டிகள் சொல்லிவிடும்.
ஜெய்ஸ்வால் தனது ஸ்டிரைக் ரேட்டையும் கணிசமாக அதிகரித்து, இந்த சீசனில் 167.15 என்ற வியக்கத்தக்க சராசரியாக 52.27 நான்கு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் அடித்துள்ளார்.
மேலும் படிக்க | RR vs RCB: பிளேஆப் பந்தயத்தில் முன்னேறுமா பெங்களூரு - ராஜஸ்தான் உடன் மோதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ