தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் கர்ஜிக்கப் போகும் வீரர்கள்
Ind Vs Sa 1st T20 Match: திருவனந்தபுரத்தில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிஷப் பந்த் களமிறங்குவாரா?
Ind Vs Sa 1st T20 Match: இன்று (செப்டம்பர் 28) திருவனந்தபுரத்தில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2022 டி 20 உலகக் கோப்பைக்கான தங்கள் துரத்தலை இங்கிருந்தே தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது. டி20 உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை ஒரு தொடரில் 2-1 என்ற கணக்கில் தோற்கடித்த இந்திய அணியின் விளையாடும் லெவன் அணியில் சில மாற்றங்கள், இந்தத் தொடரில் நிச்சயமாக இருக்கும்.
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் களமிறங்கவில்லை. மீண்டும் அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்துள்ள நிலையில், அவர் இந்தத் தொடரில் அவர் களமிறங்குவார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து ஒரு ஃபினிஷராக தனது பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாடும் பதினோரு வீரர்களில் இறுதி இடத்திற்கான ரிஷப் பந்தின் மிகப்பெரிய போட்டியாளர் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கே.எல்.ராகுலை விமர்சிக்காதீர்கள் - சுனில் கவாஸ்கர் சப்போர்ட்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்னும் கோவிடில் இருந்து மீளவில்லை, புவனேஷ்வர் குமார் T20 கிரிக்கெட்டில் அதிக பணிச்சுமையை சுமந்தவர். புவனேஷ்வர் குமார் இல்லை என்றால், பஞ்சாப் கிங்ஸ் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நிச்சயமாக மீண்டும் களமிறங்குவார்.
அர்ஷ்தீப்பின் சர்வதேச கிரிக்கெட் கேரியர், ரோலர்-கோஸ்டர் போல மேலும் கீழுமாக உள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் ஆசியக் கோப்பை 2022 இல் இந்தியா இழந்த பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முக்கியமான கேட்சை கைவிட்டதால் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார் அர்ஷ்தீப்.
சுழற்பந்து வீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அக்சர் படேல் தவிர மற்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி - ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 1வது T20 போட்டியில் இந்த வீரர்கள் களம் இறங்கலாம்:
இந்தியா: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்
தென்னாப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டெம்பா பவுமா, ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஐடன் மார்க்ரம், டுவைன் பிரிட்டோரியஸ், குயின்டன் டி காக், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நார்ட்ஜே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ