Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
கிரிக்கெட் களத்தில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின்போது வீரர்களிடையே ஏற்பட்ட பிரபலமான 4 மோதல்களை பார்க்கலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இதுவரை நடைபெற்ற முக்கியமான போட்டிகளில் வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல்களை தெரிந்து கொள்வோம்.
1. கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்
2010 ஆசிய கோப்பையின் போது, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், பேட்டிங் செய்து கொண்டிருந்த கவுதம் கம்பீருக்கு எதிராக தேவையற்ற முறையீடுகளை செய்து வம்புக்கு இழுத்தார். அப்போது கம்பீருக்கும் அக்மலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் தோனி தலையிட வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்
2. ஹர்பஜன் சிங் Vs சோயப் அக்தர்
2010 ஆசிய கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி 7 பந்துகளில் இந்தியா வெற்றி பெற 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹர்பஜன் சிங் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்துவீசிய சோயப் அக்தர், ஹர்பஜனை வம்புக்கு இழுத்தார். இருவருக்கு இடையே காரசாரமாக எழுந்த இந்த மோதலில் ஹர்பஜன் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். வெற்றிக்குப்பிறகு ஹர்பஜன் தகுந்த பதிலடியையும் கொடுத்தார்.
3. கவுதம் கம்பீர் vs ஷாஹித் அப்ரிடி
2007 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கௌதம் கம்பீர் மற்றும் ஷாஹித் அப்ரிடி இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்தது. ரன் எடுக்க ஓடி வந்த காம்பீரை அப்ரிடி வழிமறிக்க, வார்த்தை மோதல் காரசாரமாக உருவானது.
4. வீரேந்திர சேவாக் vs சோயப் அக்தர்
2003 ஆம் ஆண்டு ஒரு போட்டியில், சோயிப் அக்தர், வீரேந்திர சேவாக்கிற்கு ஒன்றன் பின் ஒன்றாக பவுன்சர்களை வீசினார். சேவாக் அவுட்டாக, அக்தரிடம் சென்று இதே பந்தை தைரியம் இருந்தால் சச்சினுக்கு வீசுங்கள் பார்க்கலாம் என கூறியிருக்கிறார். அவர் அதே போன்ற பந்துகளை சச்சினுக்கும் வீசியிருக்கிறார். அந்த பந்துகளை சச்சின் சிக்சர்களாக விளாச, அக்தர் அமைதியானார்.
மேலும் படிக்க | பும்ரா போல பந்துவீசி கலாய்த்த ஹர்திக் பாண்டியா! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ