‘அதே நல்ல பேரோட அப்படியே quit செஞ்சிடுங்க தல’: ஏமாற்றத்தின் உச்சத்தில் Twitter-ல் புலம்பும் CSK Fans!!
CSK 2018 ஆம் ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் வந்தபோது, அந்த ஆண்டே அணியை சேம்பியன் ஆக்கியதிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டு, அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதிலும் தோனிக்கும் ஃப்ளெமிங்கிற்கும் அதிக பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சீசனிலும் CSK மிகச்சிறப்பாக விளையாடியதையே பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது பொறுமையை இழக்கத் தொடங்கியுள்ளனர். IPL வரலாற்றில் CSK மிகவும் உறுதியான அணியாக இருந்து வந்துள்ளது. இது வரை அவர்கள் கலந்துகொண்ட அனைத்து சீசன்களிலும் CSK ப்ளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள CSK அணிக்கு இந்த சீசன் மோசமான ஒன்றாகவே இதுவரை இருந்துள்ளது. IPL 2020-ல் பத்து ஆட்டங்களுக்குப் பிறகு, CSK புள்ளிகள் அட்டவணையில் கீழே உள்ளது. மூன்று வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளை மட்டுமே CSK பெற்றுள்ளது. CSK-வின் பந்துவீச்சு நன்றாக இருந்தாலும் அவர்களது பேட்டிங்கில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
சிஎஸ்கே திங்களன்று ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக சீசனின் ஏழாவது தோல்வியைத் தழுவியது. மிக மோசமான பேட்டிங்கே இதற்குக் காரணமாக இருந்தது. ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் மற்றும் கேப்டன் எம்.எஸ்.தோனி போன்ற பெரிய வீரர்களால் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாமல் 20 ஓவர்களில் 125 ரன்களை மட்டுமே அணி எடுத்தது. இந்த இலக்கை RR 15 பந்துகள் மிச்சமுள்ள நிலையில் எட்டியது.
இந்த இழப்பு CSK பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்து. போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni), இளைய வீரர்களிடம் பேட்டிங்கிற்கான உறுதி இல்லை என்று கூறினார். இந்த கருத்து சமூக ஊடகங்களில் பல ரசிகர்களை சோர்வடையச் செய்தது.
பல ரசிகர்கள் ட்விட்டரில் தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் (Stephen Fleming) ஆகியோரை அணியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். CSK 2018 ஆம் ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் வந்தபோது, அந்த ஆண்டே அணியை சேம்பியன் ஆக்கியதிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டு, அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதிலும் தோனிக்கும் ஃப்ளெமிங்கிற்கும் அதிக பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
சி.எஸ்.கே தற்போது புள்ளிகள் அட்டவணையில் கீழே உள்ளன. எனினும் பல சாத்தியக்கூறுகள் CSK-க்கு சாதகமாக அமைந்து, CSK-வும் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அவர்கள் ப்ளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான ஒரு மிகச்சிறிய வாய்ப்பு இன்னும் உள்ளது. போட்டியில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான CSK, பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து வெளியேறுவதற்கும் அணிக்கும் இடையில் ஒரு தோல்வி மட்டுமே உள்ளது.
வெள்ளியன்று CSK மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும். சீசனின் இறுதி மூன்று ஆட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளை CSK எதிர்கொள்வார்கள்.
ALSO READ: IPL 2020: தோனியின் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR