ICC_WC_2019: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை போராடி வெற்றி...
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019 இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 39-வது லீக் ஆட்டம் செஸ்டர் -லி -ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைப்பெற்றது, இப்போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019 இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 39-வது லீக் ஆட்டம் செஸ்டர் -லி -ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைப்பெற்றது, இப்போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.
அணியில் அதிகபட்சமாக பெர்னான்டோ 104(103) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக குஷல் பெராரா 64(51) ரன்கள் குவித்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை மேற்கிந்திய வீரர்கள் வெளிப்படுத்தி வந்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த மேற்கிந்திய தீவு 315 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் நிக்கோலஸ் பூரண் 118(103), பாபின் ஆலன் 51(32) ரன்கள் குவித்தனர். இவர்கள் இருவரது கூட்டணி அணியின் வெற்றியை நெருங்கிய நிலையில் ஆலனின் எதிர்பாரா ரன்அவுட் ஆட்டத்தின் போக்கை திசை திருப்பியது. இலங்கையின் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி படுத்தினார்.
இப்போட்டியல் பெற்ற வெற்றியின் மூலம் இலங்கை 8 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டியில் இலங்கை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கைக்கு அரை இறுதி செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். எனினும் இலங்கையில் இந்த கனவு பலிக்க வேண்டுமெனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.