#FIFA2018: மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரேசில்
இன்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்றில் மெக்சிகோவை வீழ்த்தி பிரேசில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
21-வது FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது.
32 நாடுகள் பங்குபெற்ற உலக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த, தற்போது நாக்-அவுட் சுற்று நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே பிரேசில் மற்றும் மெக்சிகோ வீரர்கள் கோல் போடும் முனைப்பில் விளையாடினார்கள். ஆனால் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.
பின்னர் இரண்டாம் பாதி தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் 51_வது நிமிடத்தில் கோல் அடுத்தார். மெக்ஸிகோவின் மிகுவல் லேயன் தனது கணுக்காலால் தடுத்தும் கோலை நிறுத்த முடியவில்லை.
பின்னர் ஆட்டத்தின் 88_ வது நிமிடத்தில் பிரேசில் அணியின் ராபர்டோ ஃபிர்மினோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசி வரையும் மெக்ஸிகோ வீரர்கள் கடும் முயற்ச்சி செய்தும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஏழாவது முறையாக பிரேசில் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் மெக்ஸிகோ, எட்டு அணிகள் கொண்ட குழுவில் இடம் பெறவில்லை. மெக்ஸிகோவிற்கு எதிராக நடைபெற்ற கடைசி 15 ஆட்டங்களில் 7-ல் பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது.