மான்செஸ்டர்: Manchester City அணியில் இணைந்து 10 மறக்கமுடியாத ஆண்டுகளுக்கு பிறகு செர்ஜியோ அகுவெரோ வெளியேற உள்ளார். அணி 10 கோப்பைகளை வென்றபோது அனைத்துப் போட்டிகளிலும் முன்னணி கோல் அடித்தவர் செர்ஜியோ அகுவெரோ என்று மான்செஸ்டர் கிளப் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகுவெரோ 2011 இல் அட்லெடிகோ மாட்ரிட்டில் (Atletico Madrid) இருந்து எட்டிஹாட் ஸ்டேடியத்திற்கு (Etihad Stadium) வந்து அதிரடி கோல்களை அடித்து அணிக்கு பெருமை சேர்த்த வீரர்.  


நடிகர் தனுஷ் செர்ஜியோ அகுவெரோ அணியில் இனி இருக்கமாட்டார் என்பது குறித்த டிவிட்டரை பகிர்ந்துள்ளார். தனுஷ் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த சீசன் முடிந்ததும் செர்ஜியோ அகுவெரோ ஒப்பந்தத்தில் இல்லை, அர்ஜென்டினா வீரருடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்பதை Manchester City கால்பந்து அணி உறுதிப்படுத்தியுள்ளது. அவர் அணியில் நீடிக்க விரும்பினாலும், அவருக்கு ஏற்பட்ட  காயம் மற்றும் உடல்நிலையினால்,  இந்த சீசனில் அவர் ஐந்து போட்டிகளில் மட்டுமே அவர் கலந்துக் கொள்ள முடிந்தது. இதுவே அவருடைய ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததற்கு காரணமானது.


Also Read | IPL PLAYER: ஐ.பி.எல் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் யார்?
 
"ஒரு சுழற்சி முடிவுக்கு வரும்போது, ​​உணர்ச்சிகளும் மாறுபடுகிறது" என்று அகுவெரோ ட்விட்டரில் பதிவிட்டார். "மான்செஸ்டர் சிட்டியுடன் முழு பத்து சீசன்களிலும் (Premier League) விளையாடியது எனக்கு ஒரு பெரிய திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வயதிலும் ஒரு தொழில்முறை வீரருக்கு அசாதாரணமானவை இவை."


"முக்கிய சாதனைகள் கொண்ட பத்து சீசன்கள் மூலம் நான் சிறந்த வரலாற்று கோல் அடித்தவனாக மாற முடிந்தது, மேலும் இந்த கிளப்பை நேசிக்கும் அனைவருடனும் ஒரு அழிக்கமுடியாத பிணைப்பை ஏற்படுத்தினேன். எப்போதும் என் இதயத்தில் இருக்கும் நாட்கள், மான்செஸ்டர் அணியில் (Manchester United) எனக்கு கிடிஅத்தது. 2011 ஆம் ஆண்டில் அணியில் இணைந்த நான், உரிமையாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் பல வீரர்களின் பங்களிப்புடன், உலகின் மிகவும் முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றேன்”.


Also Read | Shreyas Iyer இல்லாத நிலையில் டெல்லி கேபிடல்ஸின் கேப்டன் இவர்களில் யார்?


"இந்த பெருமையை தக்கவைத்துக்கொள்வதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். இந்த சீசனின் எஞ்சிய காலங்களில் அதிக பட்டங்களை வெல்வதற்கும் ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருவதற்கும் நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். பின்னர், புதிய சவால்களைக் கொண்ட ஒரு புதிய கட்டம் தொடங்கும், அதே ஆர்வத்தோடும் நிபுணத்துவத்தோடும் அவற்றை எதிர்கொள்ள நான் முழுமையாக தயாராக இருக்கிறேன், நான் எப்போதும் மிக உயர்ந்த மட்டத்தில் தொடர்ந்து இருப்பேன்” என்று செர்ஜியோ தனது டிவிட்டர் செய்தியில் கூறினார்.



அகுவெரோ இதுவரை சிட்டிக்காக 384 போட்டிகளில் விளையாடி 257 கோல்களை அடித்திருக்கிறார் - இது மான்செஸ்டர் கிளப்பில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையாகும்.


QPRக்கு எதிரான அவரது கடைசி நிமிட கோல்,ஒரு கோல்-வித்தியாசத்தில் பட்டத்தை வென்றது ​​மிகச் சிறந்த, பிரீமியர் லீக்கின் வெற்றிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | Michael Vaughan: இந்தியா தற்காப்புடன் பேட்டிங் செய்வது உண்மையா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR