புதுடெல்லி: ஐபிஎல் 2020 ல் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக மௌனத்தை உடைத்தவர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina). ஐபிஎல் சீசன் -13 தொடங்குவதற்கு முன்பு அவர் வீடு திரும்பியிருந்தார். இப்போது இதற்கான காரணத்தை அவர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'பஞ்சாப்பில் வைத்து எனது மாமாவின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எனது மாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த இரவு என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், அது யார் என்பது குறித்து பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.


 


ALSO READ | ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறதா? இனி CSK அணிக்காக ஆட மாட்டார் சின்ன தல சுரேஷ் ரெய்னா


 



 


 



 


இந்த சம்பவம் அனைத்தும் பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ரெய்னாவின் 58 வயதான மாமாவை துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். 5 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குடும்பம் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதே இரவில், மாதோபூர் பகுதியின் தரியால் கிராமத்தில் 'காலே கச்சச்சேவாலா' கும்பல் இந்த சம்பவத்தை நடத்தியது. சுரேஷ் ரெய்னாவின் மாமாவின் பெயர் அசோக் குமார். இவர் தொழில் அடிப்படையில் அரசு ஒப்பந்தக்காரர். இந்த தாக்குதலில் அவரது 80 வயது தாய் சத்யா தேவி, அவரது மனைவி ஆஷா தேவி, அவரது மகன் அபின் மற்றும் கௌஷல் ஆகியோர் படுகாயமடைந்தனர்.