சர்பிராஸ் கான் 20 ஓவர் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார் - கங்குலி
இந்திய அணியின் இளம் வீரர் சர்பிராஸ்கான் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இளம் வீரர்களைக் கொண்டே இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. சர்பிராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் ஆகியோர் இந்த சீரிஸில் இதுவரை சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். அவர்களுக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவும் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வாய்ப்பளித்துள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரையில் நீண்ட நாட்களாக இந்திய அணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த சர்பிராஸ் கான் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்துவிட்டார்.
அவரைப் போலவே ராஞ்சியை சேர்ந்த துருவ் ஜூரல் பேட்டிங்கும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வேகப்பந்து வீச்சில் ஆகாஷ் தீப் நல்ல புதிய வரவாக இருக்கிறார். இவர்களை இனி அடிக்கடி இந்திய கிரிக்கெட்டில் பார்க்க முடியும் என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இதில் சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் முதல் தரப் போட்டியில் குவிக்க முடியுமோ அவ்வளவு ரன்கள் குவித்து இந்திய அணிக்கு தேர்வான வீரராக இருக்கிறார்.
மேலும் படிக்க | IND vs ENG: இந்திய அணியில் நடக்கும் உள்ளே - வெளியே... எக்கச்சக்க மாற்றங்கள்
ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை சர்பிராஸூக்கு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. மிக மோசமாகவே விளையாடினார். ஏபி.டிவில்லியர்ஸ், கெயில் போன்ற அதிரடி வீரர்கள் இருந்த ஆர்சிபி அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. விராட் கோலி பாராட்டும் அளவுக்கான இன்னிங்ஸ் ஒன்றையும் விளையாடி இருந்தார். ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் அவர் விளையாடிய மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் அப்பொழுது பெரிய வீரர்கள் கூட விளையாடியது கிடையாது. இப்படி துவங்கியவர் ஐபிஎல் வாழ்க்கை கடைசியாக அவரை எந்த அணிகளும் வாங்காத நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சர்பராஸ் கான் எந்த கிரிக்கெட் வடிவத்திற்கு சரியானவர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது “ சர்பிராஸ்கான் ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான வீரர் என்று பார்க்கிறேன். டி20 கிரிக்கெட் வடிவம் என்பது முற்றிலும் வேறு வகையானது. மேலும் ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் தரப் போட்டிகளில் ரன்கள் குவித்து வந்தவர்.
அவருடைய ரன்கள் எல்லாமே சிவப்பு பந்தில் இருக்கின்றன. எப்பொழுதுமே மற்றவர்கள் சொல்வது போல நீங்கள் அடிக்கும் ரன்கள் உங்களை எப்பொழுதும் கைவிடாது. இதுதான் சர்பராஸ் கான் விஷயத்தில் நடந்திருக்கிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பிராஸ் கானை நம்பி எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் மோகம்... வீரர்களை கைக்குள் வைக்க பிசிசிஐ புதிய திட்டம் - என்ன விஷயம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ