கிரிக்கெட் செய்திகள்: இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் வெளிப்படையான பேச்சுக்கு பெயர் பெற்றவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மற்றும் அரசியலில் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார். ஒருபுறம் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மறுபுறம் பாஜகவைச் சேர்ந்த மக்களவை எம்.பி.யாகவும் பணியாற்றி வருகிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கை தடைப் படுவதற்கு ரவி சாஸ்திரி முக்கியக் காரணம் என பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். தனது தலைமையில் தற்போதைய அணி இந்திய அணி தான் சிறந்தது என்று கூறிய ரவிசாஸ்திரியை கடுமையாக கம்பீர் தாக்கி பேசியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரவி சாஸ்திரி (Ravi Shastri) இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்தார். அதாவது கடந்த 15 ஆண்டுகளில் இது தான் சிறந்த இந்திய அணி என்று கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு கம்பீர் பதில் அளித்துள்ளார். அவர் நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில், "அவரது கருத்தில் (ரவி சாஸ்திரி) அனைவருக்கும் உடன்பாடிலை. நாட்டு மக்கள் அவரின் கருத்தை ஒப்புக்கொண்டிருந்தால், அதனை பாராட்டி இருப்பார்கள். இங்கே கவனிக்க வேண்டியது, நீங்கள் அணியை எப்படி வேண்டுமானாலும் வழிநடத்துங்கள். முதல் விஷயம் நீங்கள் வெளிநாட்டில் வென்றீர்களா இல்லையா என்பதுதான். 


ALSO READ |  தோனியுடன் ஒப்பிட வேண்டாம் -கடுப்பான கெளதம் கம்பீர்


உலகக் கோப்பையை வென்ற பிறகும், இது வரை இதுதான் இந்தியாவின் நம்பர் ஒன் அணி என்று மகேந்திர சிங் தோனி மற்றும் கேரி கிர்ஸ்டனோ சொல்லவில்லை. 2011 உலகக் கோப்பை வென்ற பிறகு யாராவது அப்படி சொல்லி கேட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். 


கம்பீர் (Gautam Gambhir) மேலும் கூறுகையில், "நானோ, சச்சின் டெண்டுல்கரோ, தோனி அல்லது கிர்ஸ்டன் என யாரும் அத்தகைய கருத்தை கூறவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் உலக சாம்பியன்களாக இருந்தோம். அணியை எவ்வாறு வலுவாக முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். 


ரவி சாஸ்திரி தலைமையில் வெளிநாடு சென்ற இந்திய அணி இங்கிலாந்தில் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து. அதேபோல தென்னாப்பிரிக்காவிலும் தோற்றோம். அத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற அறிக்கையை அவர் எவ்வாறு கொடுக்க முடியும். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் இந்த அறிக்கையில் அதிக கவனம் செலுத்தியிருக்க மாட்டார்கள் என்பதையும் நானும் அறிவேன் என்றார். 


ALSO READ |  காணாமல் போன கௌதம் கம்பீர்; தேடுதல் பணிகள் தீவிரம்


தோனியுடனான தனது உறவைப் பற்றி பேசிய கம்பீர், "தோனியுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் பயணித்தோம். பல வெற்றி மற்றும் சாதனைகளை செய்தோம். இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம், ஆஸ்திரேலியாவில் சிபி தொடரை வென்றது, நியூசிலாந்தில் தொடரை வென்றது, தென்னாப்பிரிக்காவில் தொடராய் டிரா செய்தது. நாங்கள் எப்போதும் ஒன்றாக இருந்தோம். ஒரு கேப்டனும் துணை கேப்டனும் ஒன்றாக பயணிக்கும் போது, ​​எந்தவொரு சர்ச்சையும் இருக்க முடியாது. வதந்திகளை ஒளிபரப்புவது மற்றவர்களின் வேலை" என்றார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR