Lalit Modi Match Fixing, Chennai Super Kings | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அம்பயர்கள் செட்டிங் செய்யப்பட்டார்கள், பிளின்டாப்பை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்பதற்காக எல்லா அணிகளிடமும் அவரை ஏலம் எடுக்கக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசன் பிசிசிஐ செயலாளராக இருந்ததால், இந்த மோசடிகளை எல்லாம் அவர் செய்தார் என லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார். அவரின் இந்த குற்றசாட்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஏற்கனவே மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தன. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த அணி மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறி 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய அந்த அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற இரண்டாவது அணியாகவும் உள்ளது. இப்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிப்பிட்ட பிளேயர்களை டார்க்கெட் செய்து எடுத்தனர். டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின் ஆகியோரை எடுத்தது அந்த அணி. தோனியை ஏற்கனவே ரீட்டெயின் செய்து வைத்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று தோனியை வெற்றியோடு வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இம்முறை சிஎஸ்கே அணி இருக்கிறது.


மேலும் படிக்க | ரிஷப் பண்டுக்கு சம்பளம் எவ்வளவு...? ரூ.27 கோடியும் கைக்கு வரவே வராது...!


இந்த சூழலில் தான் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பல பகீர் குற்றச்சாட்டுகளை ராஜ் ஷமானி (Raj Shamani YT) யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் லலித் மோடி பேசும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளுக்கு சென்னையை சேர்ந்த அம்பயர்கள் நியமிக்கப்பட்டனர் என கூறியுள்ளார். வேறு அம்பயர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டாலும் அவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்திருக்கும் லலித் மோடி, இதனை செய்தது எல்லாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், அப்போதைய பிசிசிஐ செயலாளராக இருந்த சீனிவாசன் என தெரிவித்துள்ளார். "பிளின்டாப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வேண்டும் என்பதில் சீனிவாசன் உறுதியாக இருந்தார். அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கக்கூடாது என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டார். அதனால், எல்லா அணிகளிடமும் பிளின்டாப்பை ஏலம் எடுக்க வேண்டாம் என நாங்கள் முன்கூட்டியே கேட்டுக் கொண்டோம்" என்றும் தெரிவித்துள்ளார். இதுதவிர இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்திருக்கிறார்.


லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அந்த அணி மீது மேட்ச் பிக்சிங் புகார்கள் இருக்கும் நிலையில், ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக லலித் மோடி வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க  | உள்ளே வரும் ரோஹித், கில்... வெளியேறப்போவது யார் யார்? - அடிலெய்டில் பிளேயிங் லெவன் இதுதான்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ