பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் நான்கு நாள் டெஸ்ட் போட்டி குறித்த யோசனையை எதிர்த்ததோடு, அதை வீணான யோசனை என்று விமர்சித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நான்கு நாள் டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்கான யோசனை வீணான யோசனை மற்றும் யாரும் இதில் ஆர்வம் காட்டக்கூடாது. சவுரவ் கங்குலி நிறைய கிரிக்கெட் அனுபவங்களைக் கொண்ட ஒரு புத்திசாலி மனிதர் என்பதால் இந்த விஷயத்தை நடக்க விடமாட்டார் என்று நம்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விடமாட்டார்,” என்று அக்தர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.


44 வயதான புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கூறுகையில், கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஒப்புதல் இல்லாமல் நான்கு நாள் டெஸ்டை போட்டி முடிவை செயல்படுத்த முடியாது.



ஆசியாவிலிருந்து அதிகமான கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.


"BCCI-யின் அனுமதியின்றி ICC நான்கு நாள் டெஸ்டை செயல்படுத்த முடியாது. பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து அதிகமான மக்கள் முன்வந்து இதைப் பற்றி ஒரு வலுவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


"சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி அவர்களது வலுவான அறிக்கையை கொண்டு வந்துள்ளனர். அவர்களது கருத்துக்களை நான் வரவேற்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற நாம் நமது கருத்துகளை வெளிப்படுத்துவது நமது கடமை. நாம் ஒவ்வொருவரும் குரல் எழுப்புவது மிகவும் முக்கியம் விளையாட்டின் மிக நீளமான வடிவமைப்பை, நாம் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம்" என்று அக்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி சனிக்கிழமை, தான் நான்கு நாள் டெஸ்ட் போட்டியின் ரசிகர் அல்ல என்றும், விளையாட்டின் மிக நீண்ட வடிவத்தை அதிகம் கசக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நான் அதன் ரசிகன் அல்ல. நூறு பந்து போட்டிகளைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட வடிவமைப்பை விளையாட நான் அங்கு செல்லமாட்டேன் என்று சொன்னேன். ஏற்கனவே பல வடிவங்கள் உள்ளன. பகல்-இரவு டெஸ்ட் தான் மாற்றப்பட வேண்டியது" என தெரிவித்திருந்தார்.


"நான்கு நாள் டெஸ்ட் நடந்தால், அதன் நோக்கம் சரியாக செயல்படாது, இது விளையாட்டின் தூய்மையான வடிவத்திற்கு நியாயமில்லை. என்னைப் பொறுத்தவரை, அதை மாற்றக்கூடாது." என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


முன்னதாக, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) ஒரு பகுதியாக நான்கு நாள் டெஸ்ட் வழக்கமான அம்சமாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது, இந்த கருத்து வெளியானதில் இருந்து தற்போது நான்கு நாள் டெஸ்ட் தொடர்பாக காரசார விவாதங்கள் நடைப்பெற்று வருகிறது.