பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹாலப்!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் சாம்பியன் பட்டம் வென்றார்!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் சாம்பியன் பட்டம் வென்றார்!
பாரிசில் நடைப்பெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் மோதினர்.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 3-6 6-4 6-1 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலப் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த 40 ஆண்டுகளில் ரூமேனியாவை சேர்ந்த வீராங்கனைகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் வீராங்கனை சிமோனா ஹாலப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவர் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, 28-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாடினார்.
மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றார். பின்னர் அரையிறுதிப் போட்டியில் கார்பைன் முகுருசா-வை எதிர்கொண்டு வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது!