கிரிகெட்டுக்கு ஓய்வு கிடைத்தாலும் காம்பீரின் விமர்சனத்துக்கு ஓய்வே இருக்காது. இவ்வளவு நாள் ஃபார்ம் இல்லாத இந்திய கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த காம்பீர், இப்போது பயிற்சியாளர்கள் மீது தன்னுடைய மேலான பார்வையை திருப்பியிருக்கிறார். ஏனென்றால் இந்திய அணி இப்போது ரெஸ்டில் இருக்கிறது. அடுத்தாக வங்கதேச டூருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில், இந்திய அணிக்காக பணிபுரிய வேண்டும் என விரும்பும் வெளிநாட்டு பயிற்சியாளர்களின் கனவுக்கு மண்ணை அள்ளி போட்டிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வெறும் 90 ரன்களில் சதத்தை தவறவிட்ட ரிஷப் பன்ட்! இணையவாசிகளின் பாய்ச்சல்


இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில், இந்திய அணிக்கு இந்தியர்கள் மட்டுமே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் பயிற்சியாளர்கள் எல்லாம் இங்கு வந்து பணம் சம்பாதித்துவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள் என சாடியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு உணர்ச்சி, அதனை இந்திய அணிக்காக விளையாடியவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். 


அனில் கும்பிளே, ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் என யாராக இருந்தாலும், அவர்களின் பணியையும் நியமனத்தையும் மதிக்கிறேன். அவர்களைப் போலவே இனி வரும் காலத்திலும் இந்திய அணிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களே பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என நம்புகிறேன் என்றும் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ஐபிஎல் போட்டிகளிலும் இதனை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், ஒருவேளை வரும் காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை காம்பீருக்கு வந்துவிட்டதோ? அதற்காக இப்பவே அடிபோடுகிறாரோ? என்றும் கிண்டலடித்துள்ளனர்.  


மேலும் படிக்க | தோனிக்குப்பிறகு சிஎஸ்கே கேப்டன் இவரா? ஜடேஜா இல்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ