Gautam Gambhir | கேஎல் ராகுல் மீது கம்பீர் அதிருப்தி, ரோகித் செம ஹேப்பி
Gautam Gambhir News | கேஎல் ராகுல் மீது இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என ஆவேசப்பட்டுள்ளார்.
Gautam Gambhir, KL Rahul News Tamil | இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டானதால் இந்திய அணியால் இப்போட்டியில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணம் என கருதும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், குறிப்பாக கேஎல் ராகுல் மீது அதிருப்தியில் உள்ளார். அவருக்காக பரிந்து பேசி இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தால், அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என ஆவேசமடைந்துள்ளார். அடுத்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம் தான் என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.
கேஎல் ராகுல் - கம்பீர் காம்பினேஷன்
ஐபிஎல் போட்டியில் கேஎல் ராகுல் - கம்பீர் கூட்டணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்தனர். இருவரின் கூட்டணியில் லக்னோ அணி சிறப்பாகவே செயல்பட்ட நிலையில், அப்போது முதல் ராகுல் மற்றும் கம்பீருக்கு இடையே நல்ல நட்பும் உருவானது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர், தன்னுடைய நட்பின் அடிப்படையில் கே.எல். ராகுலுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாய்ப்பு வழங்கி வருகிறார். டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என எந்த பார்ம்மேட்டாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வாய்ப்பு இருந்தால் அந்த இடத்தை கே.எல்.ராகுலுக்கு கொடுக்கிறார் கம்பீர்.
கேஎல் ராகுல் மீது அதிருப்தி
ஆனால் இந்த வாய்ப்புகளை ராகுல் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸில் மிக மோசமாகவே ஆடினார். அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடியிருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கக்கூட வாய்ப்புள்ளது. கேஎல் ராகுல் ஒரு 50 ரன்கள் அடித்திருந்தால் இந்திய அணி இன்னும் கூடுதல் ரன்கள் லீட் எடுத்திருக்க முடியும். அதனால் இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி நியூசிலாந்து அணியை தோற்கடித்திருக்கலாம். இந்த அருமையான வாய்ப்பை ராகுல் தவறவிட்டுவிட்டார். இதனால் அடுத்த போட்டியில் ராகுல் இடத்துக்கு ஒரு ஆல்ரவுண்டரை சேர்க்கலாம் என கேப்டன் ரோகித் சர்மா முடிவெடுத்திருக்கிறார். அதனடிப்படையிலேயே வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ரோகித் சர்மா - ராகுல் மோதல்
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கே.எல்.ராகுல் மீது தனிப்பட்ட முறையில் எந்த அதிருப்தியும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ரோகித் சர்மா நினைக்கும் டீம் காம்பினேஷனில் கே.எல். ராகுல் இடம்பெற முடியாது. ஏனென்றால் 4 பேட்ஸ்மேன்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், இரண்டு முழுநேர ஆல் ஆல்ரவுண்டர்கள் என்பது தான் ரோகித் சர்மாவின் டீம் காம்பினேஷன். சுழற்பந்து வீச்சாளர்களில் ஜடேஜா, அஸ்வின் ஓரளவுக்கு பேட்டிங் ஆடக்கூடியவர்கள். 5வது பேட்ஸ்மேனும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் விருப்பம். அந்தவகையில் பார்க்கும்போது ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இருக்க முடியாது. புனே டெஸ்ட் போட்டியில் இந்த காம்பினேஷனில் அணியை களமிறக்க ரோகித் முடிவு செய்திருப்பதால், அடுத்த போட்டியில் இந்த இரண்டு பிளேயர்களும் பிளேயிங் லெவனில் இருக்க வாய்ப்பில்லை.
மேலும் படிக்க | முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ