ஷாகீன் அப்ரிடியை அசால்டாக அடிக்கலாம் ; காம்பீர் சொல்லும் அட்வைஸ்
20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வேகப்புயல் ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அட்வைஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தங்களின் முதல் ஆட்டத்தில் சந்திக்க இருக்கின்றன. பரம எதிரிகளான இருவரும் மோத இருக்கும் ஆட்டத்தை உலகமே எதிர்நோக்கி இருக்கிறது. கடந்த 20 ஓவர் உலக கோப்பையில் முதன்முறையாக பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவி, அதிர்ச்சி கொடுத்தது. அதன்பின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டன. கேப்டனாக இருந்த விராட் கோலி, அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் படிக்க | இதெல்லாம் பிசிசிஐ தலைவராக கங்குலி செய்த சாதனைகளா?
இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ரோகித் கேப்டனாக பொறுப்பேற்று இப்போது அவர் தலைமையில் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட இருக்கிறது. முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வதால், கடந்த முறை சந்தித்த தோல்விக்கு இந்திய அணி பழிக்கு பழி வாங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் அணியில் வேகப்புயலாக இருக்கும் ஷாகீன் அப்ரிடி, காயத்துக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த உலக கோப்பையில் இந்திய அணியின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தி குடைச்சல் கொடுத்தவர் என்பதால், அவரை மீண்டும் துருப்புச் சீட்டாக நினைகிறது பாகிஸ்தான்.
ஆனால், இந்தமுறை இந்தியா அவரை தெளிவாக எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறது. இந்நிலையில், ஷாகீன் அப்ரிடியை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அவரது ஓவரில் விக்கெட் கொடுக்கக்கூடாது என தடுப்பாட்டத்தில் ஆடினால் அது ஷாகீன் அப்ரிடிக்கு சாதகமாக அமையும் என கூறியுள்ள காம்பீர், அதிரடியாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கோலிக்கு கங்குலி செய்த துரோகம்! கங்குலிக்கு ஏற்பட்ட அதே நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ