T20 WC: நான் தேர்வாளராக இருந்தால் கோலியை தேர்வு செய்வேன்! சுனில் கவாஸ்கர் கருத்து
Gavaskar On Kohli For T20 WC: இந்தியாவின் T20 WC போட்டிகளில் விளையாடும் அணியில் விராட் கோஹ்லி சேர்க்கப்படாமல் போகலாம் என்ற அனுமானங்களுக்கு லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் என்ன சொல்கிறார்?
நியூடெல்லி: 2022 டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டதிலிருந்து, ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்றவர்கள் இந்தியாவின் டி20 திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி அடிக்கடி எழுந்துவருகிறது. அதிலும், இந்த ஐபிஎல் சீசனில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இளம் இந்திய பேட்டர்கள் அதிகமாக இருப்பதால், கிரிக்கெட் போட்டிகளில் குறுகிய வடிவத்தில் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கான வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிடும் என பலர் நம்புகிறார்கள்.
இருப்பினும், கோஹ்லி மற்றும் ரோஹித்தின் T20I எதிர்காலம் குறித்து பிசிசிஐ தேர்வாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில், லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கரிடம் கோஹ்லியின் T20I எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது, IPL 2024 இல் விராட் கோலியின் ஃபார்மை 'கவனிக்க வேண்டும்' என்று மூத்த வீரர் கவாஸ்கர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல்லில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பேட்டர்கள்! வீரர்களின் பட்டியல்
ஸ்போர்ட்ஸ் டாக் என்ற ஊடகத்திடம் பேசிய கவாஸ்கர், "அடுத்த டி20 உலகக் கோப்பை 2024 இல் விளையாடப்படும். அதற்கு முன் மார்ச்-ஏப்ரலில் மற்றொரு ஐபிஎல் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். "கோலியின் ஃபார்ம் அந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும். அதைப் பற்றி இப்போது பேசிப் பிரயோசனம் இல்லை. வரவிருக்கும் டி20 சர்வதேச போட்டியைப் பற்றி நாங்கள் பேசுகிறோம் என்றால், ஜூன் மாதத்தில் இந்தியா ஒரு போட்டியில் விளையாடுகிறது. அதில் அவரது ஃபார்மைப் பொறுத்து, அவர் அணியில் இடம் பெறலாம்” என்று தெரிவித்தார்.
நான் தேர்வாளராக இருந்தால் விராட் கோலியை தேர்வு செய்வேன்
ஆனால், 2024-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையைப் பற்றி பேசுகையில், அதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும், பின்னர் உலகக் கோப்பை அணிக்கான தேர்வு பற்றி பேசலாம்.
மேலும் படிக்க | அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை?
உலகக் கோப்பை அணியில் விராட் கண்டிப்பாக இருப்பார். T20I அணியில் தற்போதைய வடிவத்தில் இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் அவர் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடிப்பது மிகப் பெரிய சாதனை. ஏனென்றால், 50 ரன்கள் எடுப்பது கூட கடினம் என்ற நிலையில், கோஹ்லி 2 சதங்கள் அடித்துள்ளார் என்பது அவரது ஃபார்மைக் காட்டுகிறது.
"இந்த சிறந்த பேட்டர் இரு சதங்கள் அடித்துள்ளார். நான் தேர்வாளராக இருந்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா டி20 விளையாடினால், சந்தேகமில்லாமல் அவரை அணியில் சேர்ப்பேன்." என்று லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் தெரிவித்துள்ளது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 ஐ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கோஹ்லி 639 ரன்களுடன் முடித்தார், இதில் 6 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.
மேலும் படிக்க | CSKvsGT: தோனி இறுதிப் போட்டியில் விளையாடுவதில் சிக்கல்..! விதி என்ன சொல்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ