பும்ராவை நம்பி இந்திய அணி இல்லை இந்திய முன்னாள் வீரரின் அதிரடி கருத்து
20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி பும்ராவை நம்பி இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 20 ஓவர் வடிவத்தில் உலகின் ஸ்டார் பந்துவீச்சாளராக இருக்கும் அவர், நிச்சயம் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது. அதனால் அவரின் காயத்தின் தன்மையை தொடர்ந்து கவனித்து வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அண்மையில் பேசும்போதுகூட, பும்ரா விஷயத்தில் முடிவு எடுக்க இன்னும் காலம் இருப்பதாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து பிசிசிஐ, பும்ரா மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பறைசாற்றியது. அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றில், பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் படிக்க | T20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா பும்ரா? கங்குலி கொடுத்த அப்டேட்
அணி நிர்வாகம் இப்படி கூறும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர், பேட்டி ஒன்றில் பும்ராவை நம்பி இந்திய அணி இல்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் இல்லாமல் விளையாடுவதற்கு இந்திய அணி தயாராகிவிட்டதாக தெரிவித்திருக்கும் கவாஸ்கர், கடந்த சில ஆண்டுகளில் பும்ரா இந்திய அணிக்காக எத்தனை 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
மேலும் கவாஸ்கர் பேசும்போது, "பும்ரா உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணிக்காக எத்தனை 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் அணியில் இருப்பது பலம் என்றாலும், பும்ரா இல்லாமல் விளையாட இந்திய அணி பழகிவிட்டது. பும்ரா இல்லாதபோது எப்படியான அணியை உருவாக்க வேண்டும் என்பதும் அணி நிர்வாகத்துக்கு தெரியும். அதனால், 20 ஓவர் உலகக்கோப்பையில் அதற்கேற்ப இந்திய அணி திட்டமிடும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ