22 வயதில் எண்ணிலடங்கா தங்கம்... வீர மங்கையின் போராட்ட வாழ்வு - யார் இந்த நிது கங்காஸ்?
Boxer Nitu Ghanghas Biography: உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வென்ற, 22 வயதேயான வீராங்கனை நிது கங்காஸ் குறித்தும், அவரின் போராட்ட வாழ்வு குறித்தும் இதில் தெரிந்து கொள்ளலாம்.
Boxer Nitu Ghanghas Biography: டெல்லியில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின், 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் மங்கோலிய நாட்டு லுட்சைகான் அல்டான்செட்செக்கை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து நிது கங்காஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியா சார்பாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் பெறும் ஆறாவது வீராங்கனை இவர்தான். இந்நிலையில், 22 வயதேயான வீராங்கனை நிது கங்காஸ் குறித்தும், அவரின் போராட்ட வாழ்வு குறித்தும் இதில் தெரிந்து கொள்ளலாம்.
14 வயதில் பெரும் பின்னடைவு!
ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில், 2000ஆம் ஆண்டில் அக்டோபர் 19 அன்று பிறந்த கங்காஸ், தனது 12வது வயதில் குத்துச்சண்டையில் ஈடுபட தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹரியானாவில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றார். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட திடீர் இடுப்பு காயம், அவரது விளையாட்டு வாழ்வில் பின்னடவை உண்டாக்கியது.
தியாக தந்தை!
அவரது தந்தை, ஜெய் பகவான் பின்னர் தனது மகளின் விளையாட்டு வாழ்வை, கவனித்துக்கொள்வதற்காக மூன்று வருடங்கள் ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்து, சுமார் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பிவானி குத்துச்சண்டை கிளப்பின் நிறுவனர் ஜகதீஷ் சிங், கங்காஸின் குத்துச்சண்டை ஆட்ட நுணுக்கத்தை கவனித்து அந்த கிளப்பில் சேர்ந்துக்கொண்டார்.
தினமும் 40 கி.மீ.,
நிது, பி.ஏ. படிப்பில் சேர்ந்திருந்த ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் இருந்து குத்துச்சண்டை கிளப்புக்கு தன் தந்தையின் ஸ்கூட்டரில் 40 கி.மீ., செல்ல வேண்டும். தினமும் ஸ்கூட்டரில் சென்று பயற்சி மேற்கொண்டுள்ளார்.
மேரி கோம் போல்...
பிவானி குத்துச்சண்டை கிளப்பில்தான், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங்கும் பயிற்சி எடுக்கும் இடமாக இருந்தது. விஜேந்தர் சிங், நிது கங்காஸிற்கு பெரும் ஊக்கத்தையும் அளித்து வந்துள்ளார். மேரி கோம்மை போன்று ஆக வேண்டும், என அவரையே மானசீக குருவாக ஏற்று நிது விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
தங்கத்தை குவித்த நிது!
2017இல் பல்கேரியாவின் சோபியாவில் நடந்த பால்கன் யூத் இன்டர்நேஷனல் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் அவரது கடின உழைப்பிற்கான பலனை முதன்முதலாக பெற்றார். அதே ஆண்டில், கௌகாத்தியில் நடைபெற்ற பெண்கள் இளையோர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் கங்காஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
2018 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் பாங்காக்கில் நடந்த 48 கிலோ எடைப்பிரிவில் ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் கங்காஸின் வாழ்க்கை மேலும் வேகமெடுத்தது. அதே ஆண்டில், செர்பியாவில் நடைபெற்ற வோஜ்வோடினாவின் கோல்டன் க்ளோவ் ஆஃப் வோஜ்வோடினா இளைஞர் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியிலும், ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் நடைபெற்ற இளைஞர் பெண்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் என இரண்டிலும் 48 கிலோ பிரிவில் முதல் பரிசை வென்றார்.
காமன்வெல்த் போட்டியிலும் தங்கம்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்தாண்டு பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்த ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் கங்காஸ் தங்கப் பதக்கத்தை வென்றார். தொடர்ந்து, பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின், 48 கிலோ பிரிவு குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் டெமி-ஜேட் ரெஸ்டனை வீழ்த்தி முதல் பரிசை வென்றார்.
இன்று மகளிர் உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் மங்கோலியாவின் லுட்சைகான் அல்டான்செட்செக்கை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து, தனது வெற்றிப்பாதையில் மற்றொரு தங்கத்தையும் அடைந்தார்.
குத்துச்சண்டை மேடையை தவிர்த்து, கங்காஸ் டெல்லியில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் பணிபுரிகிறார், அங்கு அவர் மனித வள மேலாண்மைத் துறையில் உதவி மேலாளராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விராட் கோலி சாப்பிடும் அரிசி விலை என்ன தெரியுமா...? கேட்டா அதிர்ச்சி ஆயிடுவிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ